அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2014

அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது. 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் அந்தந்த அலுவலகங்களில் இருந்து நேரடியாக வங்கிக்கே பட்டியல் அனுப்பப்படும். தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'வெப் பே-ரோல்' முறையில் சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண் துறை அலுவலர்களுக்கு சோதனை அடிப்படையில் கடந்த மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் ஊழியர் ஒருவருக்கு இந்த நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். 'கடமைக்காக' கூட்டம் போட்டு இது தான் 'வெப் பே-ரோல்' என வாய்மொழியாக கூறிவிட்டனர்; கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கவில்லை.

இதனால் உழியர்கள் தடுமாறுகின்றனர். துறை அலுவலர்களின் பணிமூப்பு விபரங்களை பதிவு செய்யவே நாட்கள் குறைவாக உள்ளது; இந்நிலையில், இம்மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த முறையிலே சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல உதவியாளர்களுக்கு இதற்கான 'யூசர் நேம், பாஸ்வேர்டு' ஆகியவற்றை கருவூலத்துறையினர் கொடுக்கவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி