என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2014

என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்.


மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்'என்ற, புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை. ஐ.ஐ.டி.,யின், மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சென்னை, போத்பிரிட்ஜ் கல்வி சேவைகள் தனியார் நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை துவக்கியுள்ளன.ஆன்லைன் அடிப்படையிலான, இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் இயக்குனர் ஆனந்த் துவக்கி வைத்தார். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் அதற்கு மேல், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், தங்கள் தனித்திறன், குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை, இதற்கான படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்களுக்கான எதிர்காலத்தையும்,வாய்ப்புகளையும் தீர்மானிக்கலாம். இந்த படிவம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என, அனைத்து மொழிகளிலும் இடம் பெற்றுள்ளது. இந்த, 'என் தேர்வு, என் எதிர்காலம்' தொடர்பான படிவம், ஒரு மாதத்திற்கு, இலவசமாக, www.btechguru.com என்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த படிவம், ஆராய்ச்சி மற்றும் நேர்காணல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுளளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கணேஷ் கூறியதாவது: பிளஸ் 2, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்கள், இந்த படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால், அவர்களுக்கான எதிர்காலம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பட்சத்தில், பெற்றோருக்கும், இளம் தலைமுறையினருக்கும் இடை யிலான முரண்பாடு புலப்படும்; பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களையும் புரிந்துகொள்ள முடியும்.இளம் தலைமுறையினர், தங்கள் தனித்திறனை அறிந்து அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க இது பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். துவக்க நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., சென்னை பேராசிரியர்கள் நாகராஜன், கமலநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி