ஜெ., அறிவிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் : ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2014

ஜெ., அறிவிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் : ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி..


'50 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலையாக தரம் உயர்த்தப்படும்' எனமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது, இதுவரை வெறும் அறிவிப்பாகவே உள்ளது.
'மாணவர்கள் நலன் கருதி ஆண்டுதோறும் 100 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என 2014 ஜூலை??ல் நடந்த கல்வி மானியக் கோரிக்கையில் அப்போதய முதல்வர் ஜெ., அறிவித்தார். முதுகலை ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை தொடர்ந்து, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால், உயர்நிலைப் பள்ளிகள் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. வழக்கமாக, கல்வி ஆண்டு துவக்கத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியானால் பள்ளிகளை தேர்வு செய்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், பள்ளிகள் பட்டியல் தயார் நிலையில் இருந்தும், காலாண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் தரம் உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. கல்வி அதிகாரிகளை கண்டித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அக்.,29ல் முதன்மை கல்வி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சில சங்கங்களும் போராட்டங்களை அறிவித்து வருகின்றன. இதுகுறித்து அச்சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு நீண்ட தூரம் நடந்து சென்று மாணவர்கள் படிப்பதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் உயர்த்தப்படும். உள்ளூரிலேயே மாணவர்கள் தொடர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும். இதற்காக பொதுமக்கள் பங்களிப்பு காப்பு தொகை ரூ.2 லட்சமும் செலுத்தப் பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகள் அறிவிப்பு வெளியான சில நாட்களில், உயர்நிலைப்பள்ளி அறிவிப்பும் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் போராட்டங்கள் அறிவித்துள்ளோம். கல்வித் துறையில் தான் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன. போராட்டங்களுக்கு முன்பாவது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி