தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு.


நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக, விடுமுறை அளிக்க வேண்டும்' என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
வரும் 22ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது; அன்று ஒருநாள் மட்டும், பள்ளிகளுக்கு அரசு விடுமுறையாக உள்ளது. போக்குவரத்து மிகுந்த இடங்களில், ரோட்டை கடக்கவும், நெரிசலான பஸ்களில் பயணிக்கவும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.

எனவே, 'வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில், நகர பகுதிக்குள் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து, தீபாவளிக்கு பிறகு வரும் அரசு விடுமுறை நாளில், பள்ளியை பணி நாளாக செயல்படுத்த வேண்டும்' என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகமுள்ள திருப்பூரில், தொழிலாளர்கள் பலரும் குடும்பத்துடன், தங்களது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட செல்வது வழக்கம்.

சனி, ஞாயிறுகளில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால், பெரும்பாலானமாணவர்கள் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பள்ளிக்கு வருவதில்லை. அந்நாட்களில்,பல பள்ளிகளில், மாணவர் வருகை வெகுவாக குறைகிறது.கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கோவில் விழா, பண்டிகை நாட்களில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோளை ஏற்று, தலைமை ஆசிரியர் முடிவு செய்து, பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கலாம்; அந்த நாளுக்கு பதிலாக,மற்றொரு விடுமுறை நாளில் பள்ளி செயல்பட வேண்டும். அரசு தரப்பில், விடுமுறையாக அறிவிக்க முடியாது. ஆண்டுக்கு ஏழு நாள் வீதம், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளூர் விடுமுறை அளிக்க, விதிமுறைப்படி வாய்ப்புள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி