பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!


காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்தஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி. வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமை வந்தார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியை முடித்து விட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்டம் குறித்து ஆய்வுநடத்தினார்.பள்ளிகளில் மாணவர்களின் எளிய கணித முறை, வாசிப்புத் திறனை அவர் சோதித்துப் பார்த்தார். அதில் ஓரிரு மாணவர்களைத் தவிர பெரும்பாலான மாணவர்கள் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக இருந்தது.

மேலும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற அடிப்படைக் கணித அறிவியலிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், வகுப்பு ஆசிரியர்களிடம் பாடம் கற்பிக்கும் முறை குறித்து பூஜா குல்கர்னி கேட்டறிந்தார்.இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

உத்தரமேரூர் ஒன்றியம் விசூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பிடம் கட்டாமல் கணக்கு காட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

மேலும் இதே போன்ற பிரச்னை மாவட்டத்தில் வேறு எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் கண்காணிக்கப்படும்.காஞ்சிபுரம் ஒன்றியம் சிறுனைப் பெருக்கல் கிராமத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் கட்டப்பட்ட பள்ளி கூடுதல் வகுப்பறை குறுகிய காலத்தில் இடிந்தது குறித்தும் விசாரிக்கப்படும். பள்ளி மாணவர்களின் கற்றல், வாசித்தல், எளிய கணிதத் திறனை வளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

1 comment:

  1. MAANAVARGALAI 1 STD MUTHEL X STD VARAI ADIPPADAI VAASIPPUTHIRAN ,KANITHE THIRAN VALARPPU KATTUKODUKKAMAL PASS PANNA VAITHUVITU ITHEY MAANAVAN X11 STD FAIL YENTAL TEACHERS KKU MATTUM 17(b)
    VAZHAINKA PADUKIRATHU

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி