நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி

வீரர்கள் சம்பள விவகாரம் பூதாகாரமாக வெடிக்க, மேற்கிந்திய அணி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டது. தற்போது நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியே இந்தத் தொடரின் கடைசி போட்டி.

மேற்கிந்திய வீரர்கள் சங்கம், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட வீரர்கல் சம்பள ஒப்பந்தம் மீதான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்படாததால் தொடர்ந்து இந்தத் தொடரில் விளையாட முடியாது என்று மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்தத் தகவலை மேற்கிந்திய அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்று தெரிவித்தது.

இதனால் வேறொரு அணியை விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த அணி இலங்கையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் இது பற்றிக் கூறும்போது, “மேற்கிந்திய அணி தொடரிலிருந்து வெளியேறுகிறது. இது பற்றி அந்த அணியின் நிர்வாகி ரிச்சி ரிச்சர்ட்சனிடமிருந்து இ-மெயில் வரப்பெற்றோம்” என்றார்.

மேற்கிந்திய அணி வீரர்கள் கூட்டமைப்பின் தலைவரும், செயலதிகாரியுமாக இரட்டை பதவி வகிக்கும் வேவல் ஹிண்ட்ஸ், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் வீரர்கள் ஊதியத்தில் பெரும் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேவல் ஹிண்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதாவது வீரர்களை ஆலோசிக்காமல் வேவல் ஹிண்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு டிவைன் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வீரர்களின் தனிப்பட்ட ஸ்பான்சர்கள் விவகாரத்திலும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

இதனை எதிர்த்து மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இருதரப்பினருக்கு இடையிலும் கசப்பான வசை மின்னஞ்சல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இதனையடுத்து தற்போதைய இந்திய தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்ப முடிவெடுத்துள்ளது மேற்கிந்திய அணி. இது குறித்து பிசிசிஐ அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்று தொடரைப் பாதியிலேயே நிறுத்துவதால் ஏற்படும் நஷ்டம் மற்றும் பல விவகாரங்கள் குறித்து ஐசிசி-யிடம் முறையீடு செய்யவுள்ளது பிசிசிஐ.

24 comments:

  1. மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை; 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது

    மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டதையடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷாந்தா ரணதுங்க இது குறித்துக் கூறும்போது, “கொள்கை அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறோம்.

    டி20 கிரிக்கெட்டிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது, ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்” என்றார்.

    நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் இந்தத் தொடர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ பயணத் தேதி விவரங்களை இறுதி செய்த பிறகே இது குறித்து தெரியவரும்.

    ReplyDelete
  2. Sri sir inda year tet exm conduct panuvangala matangala sir? Suppos exam ilana epdi posting poduvanga sir?? Pls clarify my doubt

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆண்டு தேர்வு இருக்காது என்று செய்தித்தாள்களில் ஒரு சில செய்திகள் வந்துகொண்டுள்ளது.. ஆனால் இதுபற்றி முறையான் அறிவிப்பு ஏதும் வரவில்லை இந்த மாதத்திற்குள் இதற்க்கான முறையான (இருக்குமா? இருக்காதா?) அறிவிப்பு வெளியாகலாம்...

      Delete
    2. Sri mani ennai ninaivu iruka

      Delete
    3. தேர்ச்சி மதிப்பெண் குறைந்தது எவ்வளவு என்பதை முடிவு செய்ய முடியாமல் மதுரை மற்றும் சென்னை தீர்ப்பு வேறுபட்டு உள்ளதால் அதற்கு முடிவு எட்டப்படும்வரை தேர்வு நடத்த வாய்ப்புகள் மிகவும் குறைவு.

      Delete
    4. DR VIJAYAKUMAR SIR IM SELECTED BC,MBC DEPT (BV) IS THERE ANY CHANCE TO DSE\DEE

      Delete
  3. Friends enaku bc mbcwelfare dpt vanthullathu nan kovai district bc welfare school theni madurai dindukal matumthan ullathu intha 3 district friends yarukavathu virupam irunthal ennai contact pannunga nsn trb il pesi mutual seyyalam my no.9578137357

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வாழ்த்துக்கள் மேடம்... உங்களை ஞாபகம் வைத்திருக்கிறோம் அனால் நீங்கள் தான் இந்த பக்கமே வருவதில்லை...

      Delete
    3. Sri bc mbc schools ella district lum illaiya bc to dse dpt ku vara mudiyatha

      Delete
  4. THIS IS NOT GOOD FOR PLAYERS ,..,..,,

    ReplyDelete
  5. Sri sir vanakkam. Adw list trb eppa relese pannuvanga. Relese pannuna piragu ellarukm serthu councilng vaipaangala pls tel me sir.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மற்ற அனைத்து இருதிப்பட்டியலும் வந்து விட்டது இன்னும் வரவேண்டிய ஒன்று இது மட்டும் தான் என்று நினைக்கிறேன் அதனால் விரைவில் வந்துவிடும்.... கவலை வேண்டாம்...

      Delete
    2. Mr.Sankar Ganesh Sir Profile Pic Change Panunga...

      Delete
  6. Monday list vara 100% chance irukku

    Ramar case 10.50 am kku varuthu

    11 am kku stay clear agidum

    ReplyDelete
  7. conform news aaa mr adithiravidan sir and sc male mattum evala post potuvanga pls tell me sir

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கிடைத்த தகவலின்படி 69 மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றிப் பட்டியலில் உள்ளனர்

      என்னிடம் உள்ள பட்டியலில்
      ஆண்கள் : 112

      பெண்கள் :301

      மொத்தம்:413பேர் உள்ளனர்.

      68 ஐல் முதல் 110 பேர் வரை தேர்வு செய்யப்படலாம்.

      இரண்டு நாட்கள் காத்திருப்போம் நண்பரே.

      Delete
    2. adidravidan sir nice madurai case detail konjam vilakama solunga

      Delete
  8. Adidravidan sir inda seithi magilchiyaga adw's ku iruku en mailku nenga mail panunga englitindia@gmail.com

    ReplyDelete
  9. TNTET : ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியீடு?
    விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரை சார்ந்த மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்போதைய பணிநியமன முறையே பின்பற்றலாம் மேலும் மனுதாரருக்கு பதில் அளிக்க மட்டுமே சம்மன் அனுப்பபட்டது..

    ஆகவே ஆதிதிராவிடர் நலப்பள்ளி தேர்வுப்பட்டியல் வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை..நோட்டிபிகேசனில் வெளியிடப்பட்ட அனைத்துக்கும் தேர்வுப்பட்டியல் வெளியிட்டு முடிந்த நிலையில் மீதமிருக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள 669 இடநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் விரைவில் (இன்றிலிருந்து செவ்வாய் கிழமைக்குள்) வெளியிடப்படும் அதன் பின்பே இரண்டாம் தரப்பட்டியலுக்கான கலந்தாய்வுகள் நடைபெறும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்க்ன்றன

    ReplyDelete
  10. Frnds gud eve. Inaiku nilgiri dist la hm's meeting nadandadu. Athula adw dept and ramar case patri ketaka patathum . Adw la sc and st tan varuvanganu sonanga. Adw working teachers transfer counsiling coming 30 th iruku athuku apuran namaku counsiling vachu odane posting poduratha pesunanga

    ReplyDelete
    Replies
    1. Thank you, Ajantha sister, I am Radhika from gobichettipalayam, I am also waiting for adw list my weightage is 68.86.

      Delete
  11. Dear Sir

    West Indies should bear the loss. Instead of bearing loss, WI should have paid the reasonable salary to the players. The EGO made them to take wrong decision.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி