TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2014

TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு.


ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் <ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது.

நிய மனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒரு வர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொண்டனர்; இன் னும் பல ஆசிரியர்கள், பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

கிராமப்புறங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர், போதிய கணினி பயிற்சி இல்லாததால், இச்சான்றை பதிவிறக்கம் செய்யாமல் தவித்ததாக கூறப்படுகிறது; இன்னும் சிலர், "பிரவுசிங்' சென்டர்களுக்கு சென்று, பதிவிறக்கம் செய்ய முயற்சித்தும், தகுதி சான்று கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தகுதி சான்றைபதிவிறக்கம் செய்ய முடியாத ஆசிரியர்கள் பலர், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்; பதிவிறக்கம் வாயிலாக சான்றுகிடைக்காதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக தகுதி சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

9 comments:

  1. என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    ReplyDelete
  2. Sir, anybody know about When will go to CEO Office to bring TET Certificate.

    ReplyDelete
  3. wish u happy diwaly to my friends

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.........!

    ReplyDelete
  5. happy diwali

    district to other district transfer pls contact rajarajacholanveera@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி