TNTET -டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

TNTET -டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி

தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது.

இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால
முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்திவெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது.

இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்.

2 comments:

  1. வெய்ட்டேஜ் முறையின்
    குறைபாடுகளை அரசுக்கு
    எடுத்துரைக்க ஆசிரியர்
    சங்கங்கள் முன்வர
    வேண்டும் - ஆசிரியர்
    தகுதித்தேர்வில்
    தேர்ச்சி பெற்ற
    பட்டதாரி மற்றும்
    இடைநிலை ஆசிரியர்
    அமைப்பு வேண்டுகோள்
    ஒரு காட்டில் ஒரு பசு தனியாக
    மேய்ந்து கொண்டிருந்தது அந்த
    வழியாக வந்த கொடூர சிங்கம் பசுவின்
    மீது பாய்ந்தது, பசுவோ தன் உயிரை
    காக்க 30நிமிடம் போராடியது
    இறுதியில் பசுவை கடித்து கொன்று
    சாப்பிட்டது ..
    மேலும் அந்த கொடூர சிங்கம்
    வேட்டையாட சென்றது அருகில் பத்து
    பசுக்கள் மேய்ந்தும் அதில் ஒன்று
    மட்டும் தனியே மேய்ந்து
    கொண்டிருந்தது..அதனை குறி
    வைத்து சிங்கம் பாய்ந்தது இதனை
    பார்த்து மற்ற பசுக்கள் தன் இனத்தை
    காக்க ஒன்று சேர்ந்து தனது
    கொம்பால் முட்டி சிங்கத்தை
    கொன்றது...
    பார்த்தீர்களா ஆசிரியர் சொந்தங்களே
    !! ஒரு விலங்கு கூட தன் இனம்
    அழியாமல் இருக்க ஒன்று சேர்கிறது...
    எந்தருமை ஆசிரியர் சொந்தங்களே
    இதை கதையாக எடுத்துக்கொள்ள
    வேண்டாம் எங்கள் கதறலாக, கண்ணீராக
    எடுத்துக்கொள்ளுங்கள்...
    ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு
    ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி,தமிழக
    தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு
    பட்டதாரி ஆசிரியர் கழகம், என சுமார் 40
    சங்களின் செயல்பாடுகள் மற்றும்
    தீர்மானங்கள் பாராட்டுவதற்குரியது...
    உங்க்ளைபோன்ற சங்களின் ஒருமித்த,
    உரத்த குரலினால் போராடியும்,
    நீதிமன்றம் வாயிலாகவும் பல
    சாதனைகள் செய்துள்ளீர்கள் என்பது
    உண்மை உண்மை,மேலும்
    ஆசிரியர்களுக்கு தேவையான
    விடுப்புகள், ஊதிய உயர்வு, பதவி
    உயர்வு, உரிமைகளுக்கக பல
    போராட்டங்களை முன்னிறுத்தி
    வெற்றி கண்டுள்ளீர்கள் அதற்காக
    அனைத்து ஆசிரியர் கூட்டனி மற்றுன்
    சங்கங்களை மனதார பாராட்டுகிறேன்..
    ஆகவே தற்போது ஆசிரியர் என்ற
    இனத்தை அழித்து வரும் வெய்ட்டேஜ்
    என்ற கொடூர சிங்கத்தை வீழ்த்த
    அனைத்து ஆசிரியர் சங்கங்களும்
    முன்வர வேண்டும்,அறிக்கை,
    தீர்மானம் மற்றும் அரசுக்கு
    பரிந்துரைக்க முன்வர வேண்டும் என
    ஆசிரியர் தகுதித்தேர்வில்
    தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும்
    இடைநிலை ஆசிரியர் அமைப்பு
    தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.

    ReplyDelete
  2. if anyone have ABL (activity based learning) in TAMIL.....
    pls send me my mail ID: alagusundari2013@gmail.com
    i need a full details about ABL method and current status of ABL and each states in TAMIL...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி