கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்பஉத்தரவிடுமா யு.ஜி.சி., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்பஉத்தரவிடுமா யு.ஜி.சி.,


கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களைகொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
'பல்கலைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டிற்குள் நிரப்ப வேண்டும்' என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் உத்தரவிட்டது. சில பல்கலைகளில், ஏற்கனவே இப்பணி துவங்கி விட்டது. சென்னை பல்கலையில், சமீபத்தில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட்டன; தற்போதும் நேர்காணல் நடந்து வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அரசுக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஈரோடு, கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில், தகுதியான பேராசிரியர்கள் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:

அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பல, யு.ஜி.சி.,யின் நிதி பெறுகின்றன. எனவே, அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப, உத்தரவிட வேண்டும். கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை எடுக்கும் நிலை உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சில கல்லூரிகளுக்கு மட்டும், பணியிடங்கள் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்குகிறது. இதையும் யு.ஜி.சி., கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. By exam only lecturers appoint Lanna nalla irukkum...

    ReplyDelete
  2. Exam should be conducted for the recruitment of college lecturers. it is the only way to improve the quality of education through the selection of eligible candidates. who date to suggest to the govt. on behalf of the elite and the medias?

    ReplyDelete
  3. FROM 1998 TILL NOW, TAMILNADU GOVT. DID NOT CONDUCT WRITTEN EXAM FOR COLLEGE LECTURERS IN ITS APPOINTMENT. CHIEF MINISTER, AMMA, IS REQUESTED TO VIEW THIS MATTER SERIOUSLY AND GIVE A CHANCE TO YOUNG GENERATION TO ENTER THE COLLEGIATE SERVICE. WILL MEDIA HELP THE YOUNGER GENERATION IN THIS MATTER?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி