12 ஆயிரம் காலியிடங்கள்: 6 மாதத்தில் நிரப்ப திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

12 ஆயிரம் காலியிடங்கள்: 6 மாதத்தில் நிரப்ப திட்டம்

'சமூக நலத்துறையில், காலியாகவுள்ள, 12 ஆயிரம் பணியிடங்கள், ஆறு மாதத்தில் நிரப்பப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா கூறினார்.

பெங்களூருவில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சமூக நலத்துறையில், 12 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. ஆறு மாதத்தில், இப்பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, வார்டன்களே, பாடம் சொல்லித்தர நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, பாடத்தின் துறை தலைவர் பாடம் சொல்லித் தருவார். டிச.,4ம் தேதி, அனைத்து ஜாதி தலைவர்கள், சங்க தலைவர்களை அழைத்து, கலெக்டர் முன், பேசி, ஜாதிவாரியான கணக்கு எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். டிசம்பர் கடைசி வாரத்தில் கணக்கெடுப்பு துவங்கி, பிப்., மாதத்திற்குள் முடிவடையும். வாரியம், கார்ப்பரேஷன் தலைவர் பதவி நியமனத்தில், எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. காங்., மேலிட அனுமதியுடன் தான், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், யாரையும் குறை சொல்லக்கூடாது. முதல்வர் சித்தராமையா, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர். அவரால் தான், கர்நாடகாவில், காங்., ஆட்சிக்கு வந்தது. காங்கிரசில் தாமதமாக இணைந்தார் என்பது பெரிய விஷயமல்ல. கர்நாடகாவில், பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. மாட்டு இறைச்சி சாப்பிடுவது தவறல்ல. ஒரு மாடு வாங்குவதற்கு, 25 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி