அனுமதியின்றி இயங்கிய 65 பள்ளிகளுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

அனுமதியின்றி இயங்கிய 65 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

பெங்களூரு, வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், அனுமதியின்றி, இயங்கி வரும், 65 பள்ளிகளுக்கு, பொது உத்தரவு துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

பெங்களூரு, ஜாலஹள்ளி, ஆர்சிட் சர்வதேச பள்ளியில், 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, அப்பள்ளியில் நடத்திய விசாரணையில், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகள், அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில், அனைத்து பள்ளிகளும் முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்யும்படி, பொது உத்தரவு துறை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, பொது உத்தரவு துறை உதவி இயக்குனர்கள், வட்டார கல்வி அதிகாரிகள், குழுக்களாக, பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில், வடக்கு பெங்களூருவில், 24 பள்ளிகளும், தெற்கு பெங்களூருவில், 41 பள்ளிகளும் அனுமதி பெறாமல் இயங்கியது தெரிந்தது.


பெரும்பாலான பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனுமதி பெறாமல் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. வடக்கு, 1ம் பகுதியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, அரசு மற்றும் போர்டு அனுமதியின்றி, 10 பள்ளிகளும், வடக்கு, 2ம் பகுதியில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, இரு பள்ளிகளும், வடக்கு, 4ம் பகுதியில், ஆறாம் வகுப்பில் இருந்து, எட்டாம் வகுப்பு வரை, ஐந்து பள்ளிகளும், அனுமதி பெறாமல் இயங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சில, பள்ளிகள் குறித்து, தகவல் சேகரித்து வருகிறோம். இப்பள்ளிகளை மூடும்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன

கல்வித்துறை அதிகாரிகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி