ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமல்

தமிழக அரசு அறிவிப்பின்படி, ஆவின் பால் லிட்டருக்கு, 10 ரூபாய் விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இனி புதிய விலையில் தான், ஆவின் பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்.

தமிழகத்தில், ஆவின் பால் விலை, 2011ல், லிட்டருக்கு, 6.25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பின், மூன்று ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை. பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த போர்க்கொடி உயர்த்தினர். தனியார் பால் நிறுவனங்கள் பக்கம் தாவினர். இதனால், கொள்முதல் விலையை, பசும்பாலுக்கு, ஐந்து ரூபாயும்; எருமைப்பாலுக்கு, நான்கு ரூபாயும் உயர்த்திய தமிழக அரசு, விற்பனை விலை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தப்படும் என, அறிவித்தது. இதன்படி, ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல்அமலுக்கு வருகிறது.

ஆவின் பால் புது விலை : ஆவின் என்ற பெயரில் சமன்படுத்திய பால் (நீலம்); நிலைப்படுத்திய பால் (பச்சை), கொழுப்புச்சத்து உடைய பால் (ஆரஞ்சு); இருமுறை சமன்படுத்திய பால் (சிவப்பு) என, நான்கு வகை பால் விற்பனை செய்யப்படுகிறது. லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதால், புதிய விலையில் விற்கப்பட உள்ளது.

அட்டைதாரர் (அரை லிட்டர் / ரூபாயில்)

வண்ணம் பழையது புதியது

நீலம் 12.00 17:00

பச்சை 14.50 19.50

ஆரஞ்சு 16.50 21.50

சிவப்பு 11.50 16.50

சில்லரை விற்பனை

நீலம் 13.50 18.50

பச்சை 15.50 20.50

ஆரஞ்சு 17.50 22.50

சிவப்பு 12.50 17.50

20 சதவீதம் உயர்வு

ஆவின் பால் விலை உயர்வு, இன்று அமலுக்கு வரும் நிலையில், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையையும் ஆவின் நிர்வாகம்
சத்தமின்றி இன்று முதல் உயர்த்துகிறது.

பொருட்கள்

சமையல் வெண்ணெய் (500 கி) 160 180

மேஜை வெண்ணெய் (500 கி) 160 190

நெய் (அரை லிட்டர்) 185 205

குலோப்ஜாமுன் (500கி) 190 220

பால் கோவா (500 கி) 160 200

டேட்ஸ் கோவா (500 கி) 180 220

பன்னீர் (200 கி) 55 65

மோர் ஸ்பெஷல் (200 மி) 10 15

மோர் (சாதா) 4 6

மைசூர் பாகு (500 கி) 180 220

தயிர் (1 லிட்டர்) 50 60

தயிர் (200 மி) 10 12

லஸ்ஸி 15 18

சாகோபார் (60 மி) 15 17

பால் (ஞச்டூடூ) ஐஸ்கிரீம் 18- 25

வெண்ணிலா / மேங்கோ (50 மி) 6 8

வெண்ணிலா / பைனாப்பிள் (1 லிட்டர்) 105 145

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி