கல்வியில் பாகுபாடு ஒழிந்தாலொழிய இந்தியாவில் வளர்ச்சி சாத்தியம் இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2014

கல்வியில் பாகுபாடு ஒழிந்தாலொழிய இந்தியாவில் வளர்ச்சி சாத்தியம் இல்லை.


இந்தியாவின் கல்வி அமைப்பு கூர்ந்த பிரமிடுபோல் அதீத ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. இது கொடிய அநீதி மட்டுமல்ல; வேகமாக வளரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கட்டுவதற்கு முற்றிலும் பொருத்தமற்றதும் திறனற்றதுமாகும்என்பார் அமர்த்திய சென்.

அமெரிக்க அரசியல் அறிவியலாளர் மைரான் வெய்னரின் 'இந்தியாவில் அரசும் குழந்தையும்' (1991) என்ற புத்தகத்தில் அவர் சொல்கிறார், “இந்தியாவின் ஆளும் வர்க்கமும், அரசியல்-அதிகார அமைப்பினரும் கடைப்பிடிக்கும் கொள்கை, ‘எங்கள் வர்க்க குழந்தைகள் வேறு, அடித்தட்டுக் குழந்தைகள் வேறு. இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதும், ஒரே மாதிரியான கல்வி அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதும் இயலாத விஷயம்' என்பதுதான்.” பாகுபடுத்தும் இவர்களின் கண்ணோட்டமும், வர்க்க-சாதிய அகம்பாவமும்தான் இந்தியக் கல்வியின் தாழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் சொல்கிறார். இந்தப் புத்தகம் வெளிவந்தது 1991-ல். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கூற்றை அமர்த்திய சென் சொன்னது 2013-ல். இடைப்பட்ட 22 ஆண்டுகளில் இந்தியக் கல்வியின் வணிகமயமும் தனியார்மயமும், அதன் விளைவான பாகுபடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குத் தீவிரமடைந்திருக்கின்றன.
சமத்துவமாவது மண்ணாவது?
கல்வியாளர் ஜே.பி. நாயக் சொல்கிறார், “கல்வி முக்கோணத்தின் மூன்று பக்கங்கள்: அனைவரும் கல்வி பெறுதல், அதன் தரம், சமத்துவம். இதன் ஒரு பக்கம் சரிந்தாலும், முக்கோணமே உடைந்துவிடும்.” இந்தியாவில் கல்வியில் சமத்துவம் என்பது காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது. ஆகவேதான், தாழ்வுற்ற கல்வியும், அதன் காரணமாக தாழ்வுற்ற தேசமும்.
சமத்துவமாவது, மண்ணாவது? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? கற்காலத்து, காலாவதியான கதைகளெல்லாம் பேசாதீர்கள். அதெல்லாம் செத்தொழிந்துவிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் ஒழிந்துவிட்டது. பெர்லின் சுவரின் இடிபாடுகளுடன் புதைக்கப்பட்டுவிட்டது' என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். உண்மை என்னவென்றால், பெர்லின் சுவருக்கு மேற்கிலும் கிழக்கிலும் அனைத்து வளர்ந்த நாடுகளிலும், முன்னணியில் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளிலும் கல்வியில் சமத்துவம் என்பது ஏகோபித்த ஏற்புகொண்ட, ஆதாரமான வளர்ச்சிக் கொள்கை. இந்த நாடுகளில் அனைத்து வர்க்கக் குழந்தைகளும் முழுவதும் அரசு நிதியில் நடக்கும் அருகமைப் பொதுப்பள்ளிகளில்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள்.
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பள்ளி!
வகுப்பறைதான் சமத்துவம் உருவாக்கும், பிரிவுகள் உடைக்கும்; ஆகவே, அறிவைப் பெருக்கும் இடமும், ஆற்றல் வளரும் இடமும் அதுவே. நம் நாட்டில் அந்தப் பேச்சுக்கே இன்று இடமில்லை. நமது சாதிய ஏணியில் எத்தனை படிகள் இருக்கின்றனவோ, அத்தனையும் கல்வி ஏணியிலும் இருக்கின்றன. ஒவ்வொரு சிறு வர்க்கப் பிரிவுக்கும் ஒரு வகைப் பள்ளி. இத்தகைய கல்விக் கொள்கையின் மூலம் ஒரு வலிமை வாய்ந்த சமுதாயக் கட்டமைத்தல் நடந்துகொண்டிருக்கிறது. ஒளிரும் இந்தியா, வாடும் இந்தியா என்ற இரு வேறு இந்தியாக்கள் உருவாவதிலும், அதனை வலிமைப்படுத்தி, நிலைக்க வைப்பதிலும் கல்வி அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பல நாடுகளில் பள்ளிக் கல்வியின் தரத்தை ஒப்பிடும் பி..எஸ்.. என்ற உலகளாவிய கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட 74 நாடுகளில் இந்தியாவின் இடம் 73. இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கும் அனைத்து நாடுகளும் பேதங்களற்ற, இலவசப் பொதுப் பள்ளிகள் வழியாக மட்டுமே கல்வி அளிக்கும் நாடுகள். இந்த நாடுகள் சோஷலிஸ நாடுகள் அல்ல; முதலாளித்துவ நாடுகள்தான். சமத்துவத்தில் நம்பிக்கையற்ற முதலாளித்துவ நாடுகள் ஏன் அனைத்துக் குழந்தைகளும் சமமான, இலவசக் கல்வி பெறும் அமைப்பை பல காலமாக ஏற்றிருக்கின்றன? காரணம், ஒரு நாட்டின் மனித வளம் முழுவதும் ஆற்றல் பெற்ற சக்தியாக எழ வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளும் சமதரக் கல்வி பெற வேண்டும். இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடித்தளமே இத்தகைய கல்வி அமைப்புதான்.
இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகுவதன் நாசகர விளைவுகள், மனித வள வளர்ச்சியில் 174 நாடுகளில் இந்தியா 136-வது இடம்; சமூக முன்னேற்றத்தில் 132 நாடுகளில் 102-வது இடம்; உழைக்கும் மக்களில் நவீனத் திறன் கொண்டோர் இந்தியாவில் 6.7%, சீனாவில் 50%, ஐரோப்பிய யூனியனில் 75%.
எங்கெங்கு காணினும் பாகுபாடு
இந்தியக் கல்வியின் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபடுத்தலும் ஆயிரம் வழிகளில் இயங்குகின்றன. கல்வியின் ஒவ்வொரு நூலிழையிலும் பாகுபாடு பின்னப்பட்டிருக்கிறது. கொடிய அநீதியான சாதிய அமைப்பை தார்மிக அமைப்பு என்று ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடியவர்களல்லவா நாம்!
இன்று புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கட்டத்தில், வெட்கக்கேடான வர்க்கக் கல்வியே, வர்த்தகக் கல்வியே நமதாகிவிட்டது. இன்றைய ஆளும் சித்தாந்தமான சமூக டார்வினிஸம், போட்டிப் பாதை ஒன்றே வளர்ச்சிப் பாதை என்று பறைசாற்றுகிறது. வல்லவர்கள் மட்டும் வாழ வழிவகுக்கும் பாதை இது. வசதி படைத்த பெற்றோர்களின் அதீத ஆசைகளுக்காக, அதிகார வேட்கைக்காக நடக்கும் இந்த இதயமற்ற போட்டியில் குழந்தைகள் பகடைக்காய்களாக மாறுகிறார்கள். கருணையற்ற வணிக உலகத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இதைத்தான் அமர்த்திய சென், “முதல் இடத்தைப் பிடிக்கும் இளைஞர்களை உருவாக்கும் தேசிய வெறிஎன்று குறிப்பிடுகிறார்.
இந்தப் போட்டி உலகில் பாடத்திட்டம் நாளும் அதிகரிக்கிறது; பள்ளிப் பைகளின் கனம் ஏறுகிறது, முதுகுகள் வளைகின்றன, வீட்டுப்பாடம் கொல்கிறது, வாழ்வே மனஅழுத்தம் நிறைந்ததாகிறது. பள்ளி நேரத்துக்குள் இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுத்தருவது இயலாததால், தனிப்பயிற்சி அத்தியாவசியமாகி, பள்ளியின் நீட்சியாகவே மாறிவிடுகிறது. குழந்தைகள் பள்ளியிலிருந்து தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு ஓடுகிறார்கள். மாலை நேரமும், அதிகாலை நேரமும் சேர்ந்து, வகுப்புப் பாடங்களைப் படிப்பதிலேயே கழிகிறது. ‘அப்படித்தான் நீ முதல் ராங்க் வாங்க முடியும்; வெல்ல முடியும்; மற்றவர்களைத் தோற்கடிக்க முடியும். மற்றவர்களைத் தோற்கடிப்பது. அதுதான் வாழ்வின் குறிக்கோள்.'
வடிகட்டுவதற்கான உத்திகள்
இந்தப் பிரமிடின் உச்சியில், வசதி படைத்தோர் (அதாவது, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்போர்) இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச்செல்லும் திறமை பெறுகிறார்கள். மத்தியதர, மேல்தட்டுப் பெற்றோர் தங்கள் குழந்தைகள் உலகை வெல்ல வேண்டுமென்ற வெறியுடன் அவர்களை வளர்க்கிறார்கள். இவர்களுக்கு வானமே எல்லை என்று சொல்லப்படுகிறது. சிறு வயதிலிருந்தே திட்டமிட்டுபுரோகிராம்செய்யப்பட்டு, ஆற்றல் பெருக்கப்பட்டு உலக அளவில் இவர்களின் பிரவேசம் நடந்துவருகிறது. ‘ஒளிமிகு இந்தியாவின்' பதாகையை ஏந்தி, உலகை வெல்ல வளையவரும் வாலிபர் குழாம் இது. இந்தியாவை வல்லரசாக ஆக்கத் துடிப்போரின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள். இவர்களின் ஆளுமைக்கும் ஆதிக்கத்துக்குமான ஓர் உலகம் எப்பாடு பட்டேனும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். கண்டவரும் நுழைந்துவிடாதபடி அந்த ஏகபோக உலகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக, குண்டு துளைக்காத கவசங்களும், தாண்ட முடியாத மதிற்சுவர்களும் கட்டமைக்கப்பட வேண்டும். கல்வி அமைப்பின் ஒவ்வொரு படியும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு எட்டிவிடாத உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். கல்வி மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டுமென்பதிலிருந்து, ..டி. நுழைவுத் தேர்வுகள் வரை சாமானியரின் குழந்தைகள் வென்றுவிடாத வகையில், முதல் சுற்றிலேயே அவர்கள் தோற்று, வெளியேறிவிடும் வகையில் சாதுரியமாக அமைக்கப்படுகின்றன. அப்படித்தான்மெரிட்என்பது உறுதிப்படுத்தப்படும் என்பது கேள்விக்கப்பாற்பட்ட வேதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘மெரிட்என்பதன் இலக்கணத்தையும், அதன் வடிகட்டு விதிகளையும் உருவாக்குபவர்கள் அவர்களேதான்.
டென்னிஸ் தெ மெனஸ்என்ற புகழ் பெற்ற கார்ட்டூன் சிறுவன், விளையாட்டு ஒன்றைத் தன் தோழன் ஜோயிக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் சொல்கிறான், “விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம், ஜோயி!” இன்றைய இந்தியக் கல்விக் கொள்கை, அமைப்பு, விதிகள், அனைத்தையும் உருவாக்கி இயக்கிவருவது இந்த நாட்டின் மத்தியதர வர்க்கமும், அதற்கும் மேம்பட்ட வசதி படைத்தோரும்தான். இந்த வர்க்கங்களின் நலனுக்காக, அவற்றின் ஆதிக்கத்தைத் தொடர்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் அவையெல்லாம்.
இந்தக் கல்விச் சிறை தகர்க்கப்பட்டாலன்றி, இந்தியாவுக்கு வளர்ச்சி இல்லை; ஜனநாயகம் இல்லை; மக்களுக்கு வாழ்வும், விடுதலையும் இல்லை.
- வே. வசந்தி தேவி,
கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,
தொடர்புக்கு: vasanthideviv@gmail.com


46 comments:

  1. ஒருவர் உழைப்பை, மற்றவர்கள் சுரண்டாமல் இருக்க வேண்டும்
    வெளிநாடுகளில், இருக்கும் கருப்பு பணம் நம்முடைய உழைப்பு, அதை எவரும் பயன் படுத்த முடியாத நிலையில் 1% வட்டிக்கு விட்டு வைத்திருக்கிறார்கள், ஆனல் இங்கு 13% வட்டிக்கு நம் உடைமைகளை அடகு வைக்கிறோம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
    அரசு இயந்திரத்தில் அரசியல் நுழையாமல் இருந்தாலே, வளர்ச்சி சாத்தியமாகும் இல்லையென்றால் முன்பு வெள்ளையினடம் அடிமைபட்டிருந்தோம், இனிமேல் காலத்திற்க்கும் அரசியல்வாதிகளிடம் அடிமைபட்டு கிடப்போம்.

    ReplyDelete
    Replies
    1. 4 பேர் உன்னை சுமந்தால்தான் நீ பல்லக்கில் போக முடியும்
      எப்போதோ படித்தது ALEX SIR

      Delete
    2. மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் என்று சொன்னவர் பொருளாதர மேதை திரு அமர்த்தியா சென்,

      ஒருவரின் உண்மையான முன்னேற்றம், அவர்களின் உழைப்பு முழுமையாக அவர்களை வந்தடையும் போது தான். பல்லாக்கில் செல்பவர் எல்லாம், பல்லாக்கிலே சென்றால், தூக்குபவர் எப்போது பல்லாக்கில் செல்வது???

      Delete
  2. Helo alex sir one clarification plz i consult one lawyer he said u r appoinment is feb 2014 go 25 live 25.9.2014 after apointment only control sc jugment

    ReplyDelete
    Replies
    1. 25.09.2014 தீர்ப்பு ஏற்கனவே வழங்கிய பணிநியமனத்தை தடை செய்யவில்லையே baskar sir

      Delete
    2. Yes Mr Baskar, 100% right, you are appointed as per GO 25. If Supreme Court made the Judgement about GO 25 as null and void, your appointment would be questionable. That is why the Supreme Court clearly mentioned that appointments will be subject to outcome of these Special Leave Petition.

      Delete
    3. Appointment already made shall not be disturbed nu than irukku. Athai an solla mattingareenga

      Delete
    4. Gov oru go podum athai ethiruthu some people court povanga court go rathu saithal go vinal valaiku ponnavargalin nilai goverment full responsible to answer

      Delete
    5. Baskar sir relaxation la appointment anavangalukku problem varuma

      Delete
    6. Baskar sir relaxation la appointment anavangalukku problem varuma

      Delete
    7. alex sir he said sc jugment against relax affect from 25.9.2014 because GO 25 is not valid before appoinement no problem its correct

      Delete
    8. Why the Supreme court added the 2nd line as "the same will be subject to outcome these SLP.?. If S C had thought as per your opinion, they should have not added 2nd line.

      Delete
    9. thanks u r reply anyway i will sure 99 per any problem working teacher because its gov mistake

      Delete
  3. Unmai orunaal vellum andru ulagam unper sollum....

    ReplyDelete
  4. good night frns....have a sweet dreams....

    ReplyDelete
  5. 5%relaxation shouldn't be canceled for already appointed if sc canceled means it cannot stop lot of suicides dont worry appointed 5% candidates

    ReplyDelete
  6. முதுகலை தமிழாசிரியர் வெற்றி நிச்சயம்!
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 6 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    பயிற்சியில் இணைந்தவர்கள் சிலரது கருதுக்கள்

    ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
    வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

    இந்திரா, சிதம்பரம்
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    நிஹாத் பெங்களூர்.
    பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

    ரிஹானா , மேலூர் நெல்லை
    நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தாமரை, திருவண்ணாமலை

    தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete
  7. very shocking news waiting for all relaxation candidates.......by supreme court .....not me

    ReplyDelete
    Replies
    1. இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம் தனுஸ்

      Delete
  8. Replies
    1. 90 above people not effect go 25 affect by go 71

      Delete
  9. Hai danush no way the jugement favour gov because 15000 teacher join post one cancel the order all of effected gov back post teacher also sc jugement in uptet the pass mark 82 or 83 is goverment decision and dissmiss the petition

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Baskar,

      The court never bothered whether candidates are appointed or not? That is also not court’s role. If court finds irregular in appointing or someone is spoiled by the Govt GO, the Court has right to cancel all the appointments.

      I want to reproduce the news
      AGARTALA HC judgement which cancelled the 10,323 teachers and the court has allowed the government to continue classes with the existing teachers till December 31 this year. But before that, the state government has been asked to start a process of fresh appointment under an independent body.

      The above case is now appealed by the Govt at SC.

      Delete
    2. Gov to give anse the relax appointment teacher also we file the case against gov

      Delete
    3. Relaxation la appointment ஆனவங்க என்ன பாவம் பண்ணினாங்க. Relaxation குடுக்காம இருந்துருந்தா அவங்க Next exam kku படிக்க Start பண்ணி இருப்பாங்க. Job ah குடுத்துட்டு இப்ப இல்லன்னு சொன்னா எல்லாம் சும்மா இருப்பாங்களா

      Delete
    4. Dear Mrs /Mr Anitha James

      Relaxation கொடுத்ததாலே பணி வாய்ப்பை இழந்தவங்களும் பாவம் தானே. அவர்களும் நம் உடன் பிறவா சகோதர / சகோதரிகள் தானே அவர்களுக்கும் நீதி கொடுக்க வேண்டுமே!!!!

      Delete
    5. Ctet lal 16 state tet 82 and above 90 onuthan appa tn below 90 and above 90 problem varuthu nangal vali vendum an katkavilai arasu than koduthathu wait and see

      Delete
    6. 82-89 மதிப்பெண் யாராவது ஒருவர் 90 க்கு மேல் எடுத்தவர்ளுக்கு வேலை தராதே என்று சொல்லியிருந்தால் தவறு.அடுத்த தகுதி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தவர்களை அழைத்து இருந்த வேலையை விட்டுட்டு வாங்கன்னு வேலை குடுத்துட்டு இப்போ............
      இது என்ன நியாயமாரேரரரரரரரரரரரரரரரரரரரரரரர.!

      Delete
  10. Hai anitha no problem goverment pathukum

    ReplyDelete
  11. i think below 90 s affect by supreme court

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் வழக்கு தொடர தயாராகி விட்டோம் 82-89 மதிப்பெண் பெற்று பணிபுரியும் நண்பர்கள் தொடர்பில் இருங்கள் veldocuments@gmail.com

      Delete
    2. Gavermenta pathukum its goverment prestige problem

      Delete
  12. relaxation candidates not done wrong but govt mistake remove by supreme court......below 90 s remove by supreme court

    ReplyDelete
    Replies
    1. We r also ready to court file case against goverment sc jugment against relax appoint teacher

      Delete
  13. Where have you gone above 90 people's when the relaxation was announced by the government?

    ReplyDelete
  14. Inga paarunga alex and peri sir relxation candidates onnum relaxation kudunga nu govt ah ketkala. Relaxation kudukkum pothu ellarum enna pannittu iruntheenga

    ReplyDelete
  15. Relaxation kudutha pothu case pottu relaxation ah cancel panni irukka vendiyathu thana.

    ReplyDelete
  16. Enna solreenga brothers and sisters.appo 82-89 mark cancel aah

    ReplyDelete
  17. Hai no problem relax people sc jugment favor goverment because all over india problem because many thousad teacher appoinment realax including central goverment school also

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி