பணக்காரர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரத்து? பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி விரைவில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2014

பணக்காரர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரத்து? பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி விரைவில்


புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அடுத்த அதிரடியாக, பணக்காரர்களுக்கு சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. ஆனாலும், இந்த பணக்காரர்களுக்கான வரைமுறை என்ன என்பது குறித்து, அதிகாரபூர்வமான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.தற்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமே மானிய விலையில் தான் தரப்படுகிறது. பெரும் பணக்காரர்களும்இந்த சலுகையை அனுபவிக்கின்றனர்.
இதை முறைப்படுத்தும் வகையில், பணக்காரர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது:

அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன்ஒரு பகுதியாக, என்னைப் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு, சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்துசெய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, விரைவில் அறிவிக்கப்படும். சமையல்காஸ் சிலிண்டர் மானியம் பெற தகுதியானவர்கள், தகுதியற்றவர்கள் யார் யார் என்பதுபற்றிய வரைமுறை விரைவில் அறிவிக்கப்படும்.இது, தே.ஜ., கூட்டணி அரசின் கொள்கைகளில் ஒன்று.

உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருந்தால், எந்த ஒரு சிரமமான முடிவையும் எளிதாக எடுக்க முடியும். தேவையற்ற மானியத்தை ரத்து செய்வது தொடர்பாக, முடிவு எடுப்பதற்காக, காலத்தை வீணாக்க இந்தஅரசு விரும்பவில்லை. மத்திய அரசின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு, ஜெட்லி கூறினார்.

பெரும் சுமை குறையும்!

பொது வினியோக திட்டம் மற்றும் சமையல் காஸ், டீசல், உரம் போன்ற பொருட்களுக்காக கடந்த பட்ஜெட்டில், 3.60 லட்சம் கோடி ரூபாய் மானியமாக, மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டது.இந்த அதிகப்படியான மானியத்தால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை, மத்திய அரசுக்கு உருவாகி உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மானிய திட்டங்களில் நடக்கும் குளறுபடிகளை தடுப்பதுடன், தேவையற்ற மானியங்களையும் ரத்து செய்வதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் டீசல்விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடமே, மத்திய அரசு ஒப்படைத்தது.இதனால், அரசின் மானிய தொகையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.

மானியம் யாருக்கு ரத்து?

வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் மானியம் ரத்தாகலாம்' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், 'என்னை போன்ற பணக்காரர்கள்' என, ஜெட்லி கூறியுள்ளதால், 'ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமான வரி செலுத்தும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே மானியம் ரத்து ஆகும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சிலிண்டருக்கு 432 ரூபாய்!

தற்போது சென்னையில், மானிய விலையிலான சமையல் காஸ் சிலிண்டர், 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த சிலிண்டரின் சந்தை மதிப்பு, 836ரூபாய். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும், 404 ரூபாய் போக, மீதமுள்ள, 432 ரூபாயை, மத்திய அரசே மானியமாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்துகிறது.தற்போது, ஓர் ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படுகின்றன.

தற்போதைய மானியங்கள்:

*பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்குவதற்காக மட்டும், 1.25 லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

*சமையல் காஸ், மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலிய பொருட்களுக்காக, 97 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

*உரத்துக்கு, 66 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்காக, 60 ஆயிரம் கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

2 comments:

  1. allover tamilnadu if u need transfer mail to kathir202020@gmail.com

    ReplyDelete
  2. முதுகலை தமிழாசிரியர் வெற்றி நிச்சயம்!
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 6 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    பயிற்சியில் இணைந்தவர்கள் சிலரது கருதுக்கள்

    ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
    வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

    இந்திரா, சிதம்பரம்
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    நிஹாத் பெங்களூர்.
    பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

    ரிஹானா , மேலூர் நெல்லை
    நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தாமரை, திருவண்ணாமலை

    தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி