இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்!


இந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும், பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் விசா பிரச்சினையிலும், உதவ தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: தற்போதுவரை, இந்தியாவில் வழங்கப்படும் CBSE சான்றிதழ்கள், பல பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் ஏற்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே, பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான ஒரு சாதகமான முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிட்டன் பல்கலைகளும், CBSE சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்.

இந்தியாவில் பெறும் பள்ளி இறுதி சான்றிதழ்களை, பல பிரிட்டன் பல்கலைகள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததால், அந்நாட்டில் படிக்க விரும்பிய பல இந்திய மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். CBSE கல்வி முறையின் மூலம் பிளஸ் 2 நிறைவுசெய்யும் மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில் இளநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், அவர்கள் add-on course முடிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

ஏனெனில், இந்திய பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு செலவாகும் ஆண்டுகளைவிட, பிரிட்டன் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்ய, ஒரு ஆண்டு கூடுதலாக செலவாகும். எனவேதான் இந்த add-on course நிபந்தனை.

எனவே, இதுதொடர்பான சிக்கல்களைத் தீர்த்து, பள்ளி அளவீட்டு திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி தலைமைத்துவ திட்டம் மற்றும் ஒவ்வொருவருக்கு ICT மூலமாக கல்வியைக் கொண்டு செல்வது போன்ற அம்சங்களில், இரு நாடுகளும், தங்களின் முரண்பாடுகளை களையும் வகையில், செயல்பாட்டுக் குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் ஆகியோரை பரிமாற்றம் செய்துகொள்வது தொடர்பாகவும், இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


2 comments:

  1. annamaliuniversity, kamaraj university, alagappa unversity BA, MA ENGLISH free exam coaching

    at virudhunagar contect number 9791322145

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி