இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது.


இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் இன்று பாரத மாத வேடமிட்டு வந்தனர்.அனைவரையும் வரவேற்ற தலைமைஆசிரியர் சுவாதி

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் நமதுநாட்டின் அனைத்து மன்னர்களையும் அழைத்து நாம் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்று கூறி நம்மை ஒருங்கிணைத்து இன்று இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.உலகின் அனைத்து மக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவன் இந்தியனே. உலகிலேயே எல்லாசூழல்களாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நாடு இந்தியாதான்.

இது போன்ற ஒரே சீரான் தட்பவெட்ப நிலையை வேறு எங்கும் காண முடியாது. நமது நாட்டைப் போல் பண்பாட்டில் கலாசாரத்தில் பெருந்தன்மை கொண்ட நாடும் வேறு எங்கும் கிடையாது என்பதில் நாம் என்றும் பெருமிதம் கொள்ளவேண்டும் .612 சமஸ்தானங்களை இணைக்கும் வல்லமை படைத்தவராக சர்தார் வல்லபாய் பட்டெல் இருந்திருக்கிறார். என்பதில் நாமும் பெருமிதம் கொள்வதோடு இது போன்ற விழாக்கள் கொண்டாடுவதின் நோக்கமே நமது முன்னோர்களைப்பார்த்து நாம் பல்வேறு வகையில் நம்து நடைமுறைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.என்றார். அதனை தொடர்ந்து மாணவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மனிதசங்கிலி அமைத்தனர்.தேசிய ஒருங்கிணைப்புப் பாடல்களை மாணவர்கள் பாடியதோடு சில தேசிய ஒருமைப்பாட்டுப்பாடல்களுக்கு மாணவர்கள் ஆடினர். பாரத மாதாவாக வேடமிட்டும் பாரத பாரம்பரிய உடை அணிந்தும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் கொண்டனர்.

சரஸ்வதி நாகராஜன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். உதவி ஆசிரியர் ஜெகஜோதி நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி