மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2014

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு

கோவை சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டதன் வாயிலாக, ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.கோவை மாவட்டம் வீரகேரளத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 39. மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 17ம் தேதி பைக்கில் செல்லும் போது, வடவள்ளி அருகே விபத்து ஏற்பட்டது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியம், முதலுதவிக்குப் பின் கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் மூளைச்சாவு ஏற்பட்டது.டாக்டர்கள் இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததோடு, உடல் உறுப்பு தானம் குறித்தும் விளக்கினர். இதையடுத்து, பாலசுப்ரமணியத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் சம்மதித்தனர். நேற்று காலை கே.ஜி., மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். அதிகாலை 6.30 மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை, காலை 9.30 மணிக்கு நிறைவடைந்தது. கல்லீரல், ஒரு சிறுநீரகம் பி.எஸ்.ஜி., மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கே.ஜி., மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. விழிகள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.





அவிநாசி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள், கே.ஜி., மருத்துவமனையிலிருந்து பி.எஸ்.ஜி., மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன. இதனால், நான்கு நிமிடங்களில் உடல் உறுப்புகள் மருத்துவமனைகளுக்கிடையே மாற்றப்பட்டன. உடல் உறுப்புகள் தானத்தால் ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி