அறிவியல் துறையில் இந்தியா வேகமான முன்னேற்றம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

அறிவியல் துறையில் இந்தியா வேகமான முன்னேற்றம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய பல் மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பின் 27-ஆவது தேசிய கருத்தரங்கு தொடக்க விழாவில், விழா மலரை வெளியிடும் (இடமிருந்து 4-ஆவது) விஞ்ஞானி சிவதாணுபிள்ளை. உடன், டாக்டர்கள் ஜெயகுமார், ரஹமத்துல்லா, நசீம் ஷா, அனில் ஹோலி, தீபக் நல்லுசாமி, எஸ்.எம்.பாலாஜி.

அறிவியல் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறினார்.

இந்திய பல் மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பின் 27-ஆவது ஆண்டு தேசிய கருத்தரங்கம் சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசியது:

அறிவியல், தொழில்நுட்பத்தை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்தி வருவதன் மூலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதுடன், தகவல் தொடர்பு சாதனப் பயன்பாட்டில் முதல் 10 இடத்துக்குள் முன்னேறியுள்ளது. மேலும், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது. அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகளுடன், சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணையையும் இந்தியா வைத்துள்ளது.

அதேபோல, வரும் 2020-ஆம் ஆண்டில் நம் நாட்டின் உணவு உற்பத்தி 400 மில்லியன் டன்னாகவும், அணு மின்சார உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருக்கப் போகிறது. அதே நேரத்தில், மருத்துவத் துறையிலும் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுவருகிறோம்.

நமது எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்டெம் செல் மூலம் இதய பாதிப்பை சரி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஸ்டெம் செல் தொடர்பான ஆராய்ச்சி அதிகரித்துள்ளது. அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நம் நாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னேடுப்பதன் மூலம் மேலும் பல துறைகளில் சாதிக்க முடியும் என்றார்.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி