தகவல் துளி: புயல்கள் எப்படி உருவாகின்றன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

தகவல் துளி: புயல்கள் எப்படி உருவாகின்றன?


ஒவ்வொரு முறை புயல் ஏற்படும் போதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், புயல் எப்படி உருவாகிறது என்பது குறித்து படித்து தெரிந்துகொள்ளலாம் இன்றைய தகவல் துளிகளில்.
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்பு. ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக, அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் வெப்பம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை.இதன் காரணமாகவே பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கிறது.

அப்படி வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில், காற்றின் அழுத்தம் குறைந்துஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவதுகுறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.அப்படி உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் ஒழுங்குப்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலுள்ள நாடுகளும் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கின்றன.

அந்த வகையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களும் இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெயர் வைக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி