உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் திடீர் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் திடீர் ஆய்வு


மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் திடீர் விசிட் நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, தமிழகத்திலுள்ள 1,044 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த மாணவர் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் மாணவர்களின் வருகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது தெரியவந்தது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி