பட்டதாரி ஆசிரியர்களின் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

பட்டதாரி ஆசிரியர்களின் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது


2010 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் -வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை நடைமுறைபடுத்தக் கோரிஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணா விரதப் போராட்டம் சேப்பாக்கம்,சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில்தற்போது நடைபெற்று வருகிறது.

23.08.2010 நடவடிக்கைக்குட்பட்டு பழைய நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள சுமார் 8000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் ClauseV வழிக்காட்டுதல்படி நியமனம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற இருநபர்நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவு வழங்கி உள்ளது (R.A No 139/2012 and W.A No 2121/2012 Date:09.07.2013).இதனை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையும் உத்தரவு வழங்கி உள்ளது.

இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றமும் சிறப்பு விசாரணை மூலம் உத்தரவு வழங்கி உள்ளது ( SLP 3860-3861 Date:23.09.2014 )என்பது குறிப்பிடத்தக்கது.

Live photos:Mr.Vijaya Kumar Chennai

14 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி