முல்லை பெரியாறு அவசியம் ஏன்? இந்த ஒரு படம் போதும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

முல்லை பெரியாறு அவசியம் ஏன்? இந்த ஒரு படம் போதும்!



ஒட்டிய வயிறுகளோடு எக்ஸ்-ரே இல்லாமலே வெளியே தெரியும் எலும்புகளோடு தோற்றமளிக்கும் இம்மக்களின் போட்டோக்கள் பஞ்சத்தால் பழக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்டது இல்லையாம்.
முல்லை பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி வாட்ஸ்-அப்பில் ஒரு படம்சுற்றி வருகிறது.

அந்த படத்துடன் கூறப்பட்டுள்ள செய்தி இதுதான்: இந்த படம் முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின்போது எடுக்கப்பட்டது. பஞ்சத்தின் காரணமாக மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் அனுப்பப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பர்மா,மலேசியா,மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு மக்கள் அனுப்பப்பட்டனர்.இத்தகைய பஞ்சத்தால் மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல்தான் பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.முல்லை பெரியார் அணையை காப்போம். கேரள சதியை முறியடிப்போம். இவ்வாறு சொல்கிறது அந்த செய்தி.

முல்லை பெரியாறு அணையின் அவசியத்தையும் பென்னி குயிக்கின் தியாகத்தையும் இந்த படம் நன்கு விளக்குகிறது .

by
Mr.guna M

2 comments:

  1. நன்றி
    திரு. வெங்கட் சார்
    திரு்.குணா சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி