TNPSC GROUP-4 பகுதி-4 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

TNPSC GROUP-4 பகுதி-4


திருக்குறள்:
சொல்பொருள்:
* இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
* ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
* வன்சொல் - கடுஞ்சொல்
* எவன்கொலோ - ஏனோ?

* சிறுமை - துன்பம்
* மறுமை - மறுபிறவி
* இம்மை - இப்பிறவி
* நாடி - விரும்பி
* அல்லவை - பாவம்
* தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்
* அணி - அழகுக்காக அணியும் நகைகள்
* துவ்வாமை - வறுமை
* இன்புறூஉம் - இன்பம் தரும்
* அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
* முகன் - முகம்
* இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
* ஈரம் - அன்பு
* அளைஇ - கலந்து
* செம்பொருள் - மெய்ப்பொருள்
* கவர்தல் - நுகர்தல்

செய்யும் தொழிலே தெய்வம்
*  செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
*  பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
*  காலம்: 13.04.1930 - 08.10.1959
*  மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
*  தனது பாடல்களில் உழக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.
**  சில பாடல் வரிகள்:
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
"பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்"
"காயும் ஒரு நாள் கனியாகும் -நம்
கனவும் ஒரு நாள் நனவாகும்"

உரைநடை: கல்லிலே கலைவண்ணம்
* காவிரி பாயும் சோழவள நாடு, அது கலைகளின் விளைநிலம், வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் - கும்பகோணம்.
* கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் - தாராசுரம்
* இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
* நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் - ஐராவதீசுவரர் கோவில்
* முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
* யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரிபோர்த்தவர்(கஜம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
* அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
* கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் சரிகமபதநி எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
* தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
* தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றன. இதை மரபு அடையாளச்சினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கோவிலை கலைகளின் சரணாலயம் என்றே கூறலாம்.
துணைப்பாடம்: சாதனைப் பெண்மணி மேரி கியூரி
* கியூரி அண்மையார் 1876 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.
* தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்ததும், செவிலிபோல் * பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார்.
* மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார்.
* அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
* மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
* இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக, கணவன், மனைவி இருவரும் முதலில் பொலோனியும் என்னும் பொருளை கண்டுபிடித்தனர்.
* அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவிடாது ஆராய்ச்சி செய்து ரேடியம் என்னும் பொருளை கண்டுப்பிடித்தனர். இவ்விரண்டு அறிய கண்டுபிடிப்புகளுக்காக மேரி கியூரிக்கும் அவர் கணவருக்கும் 1903ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இவரின் கண்டுபிடிப்பைப் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன் வந்த போதும் தனது அறிவியல் கண்டுபிடிப்பை அறிவியல் உலகிற்கே கொடையாக கொடுத்தார்.
* மேலும் அவருக்கு இரண்டாவது முறையாக 1911 ஆண் ஆண்டு ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* மேரி கியூரி 1934 இல் இயற்கை எய்தினார்.
* கியூரியின் இறப்பிற்குப்பின் அவர் மகள் ஐரினும், மருமகன் சாலிட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935 ஆண் ஆண்டு நோபல் பரிசினை பெற்றனர்.
* ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
* நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி.

தனிப்பாடல்
சொற்பொருள்:
* இரட்சித்தானா? - காபாற்றினானா?
* அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
* பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
* குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்
* குரைகடல் - ஒலிக்கும் கடல்

நூல் குறிப்பு:
* புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை தனிப்பாடல் திரட்டு என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
* பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
* இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.
அந்த காலம் இந்த காலம்
ஆசிரியர் குறிப்பு:
* உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
* சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
* பகுத்தறிவு கவிராயர் என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவர்.
* காலம்: 25.09.1899 - 23.05.1981

தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
* டிவி - தொலைக்காட்சி
* ரேடியோ - வானொலி
* டிபன் - சிற்றுண்டி
* டீ - தேநீர்
* டெலிபோன் - தொலைபேசி
* கரண்ட் - மின்சாரம்
* ஃபேன் - மின்விசிறி
* சேர் - நாற்காலி
* லைட் - விளக்கு
* டம்ளர் - குவளை
* சைக்கிள் - மிதிவண்டி
* பிலாட்பாரம் - நடைப்பாதை
* ஆபிஸ் - அலுவலகம்
* சினிமா - திரைப்படம்
* டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
* ரோடு - சாலை
* பிளைட் - விமானம்
* பேங்க் -  வங்கி
* தியேட்டர் - திரை அரங்கு
* ஆல்பத்திரி - மருத்துவமனை
* கம்ப்யூட்டர் - கணினி
* காலேஜ் - கல்லூரி
* யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
* டெலஸ்கோப் - தொலைநோக்கி
* தெர்மோமீட்டர் - வெப்பமானி
* இன்டர்நெட் - இணையம்
* இஸ்கூல் - பள்ளி
* சயின்ஸ் - அறிவியல்
* மைக்ரோஸ்கோப் - நுண்ணோக்கி
* நம்பர் - எண்

நாடும் நகரமும்
நாடு:  நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
* மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
* நாளடைவில் நாடுகளின் உட்பிவுகளும் "நாடு" என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
* முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று.
* இப்பொழுது அப்பெயர் பொருணை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில்லுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
* சோழநாட்டில் மாயவரத்திற்கு அடுத்துள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கப்படுகிறது.
* கூர்ரைநாடு என்பது கொரநாடு என்று மருவிற்று.
* பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.

நகரம்: சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பலம்பெரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
* பாண்டியநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராகா விளங்குகிறது.
* இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

சென்னை: திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம்.
* அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.

புரம்: புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் "புரம்" என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
பட்டிணம்: கடற்கரையில் உருவாகும் நகரங்கள் "பட்டிணம்" எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கபட்டிணம் ஆகியவை "பட்டிணம்" எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.
பாக்கம்: கடற்கரைச் சிற்றூர்கள் "பாக்கம்" எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்: கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் பாக்கம் எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்: புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமராபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கும்பம்: நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் குப்பம் என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
ஆசிரியர்: சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் "ஊரும் பேரும்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

குற்றாலக் குறவஞ்சி
சொற்பொருள்:
* வானரங்கள் - ஆண் குரங்குகள்
* மந்தி - பெண் குரங்குகள்
* வான்கவிகள் - தேவர்கள்
* காயசித்தி - இறப்பை நீக்கும் மூலிகை
* வேணி - சடை
* மின்னார் - பெண்கள்
* மருங்கு - இடை

நூல் குறிப்பு:
* இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர்.
* குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.

மரமும் பழைய குடையும்
சொற்பொருள்:
* கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்
* பீற்றல் குடை - பிய்ந்த குடை

ஆசிரியர் குறிப்பு:
* அழகின் சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
* இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:
* ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது "சிலேடை" எனப்படும்.
* இதனை "இரட்டுறமொழிதல்" (இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது.

இலக்கணமும் மொழித்திறனும் நாட்டுப்புறத் தமிழ் அறிவோம்
* கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க...?
ஆனம் என்பதன் பொருள் - குழம்பு
* அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா?
நாழி என்பதன் பொருள் - தானியங்களை அளக்கும் படி
* அகவிலை என்பதன் பொருள் - தானிய விலை
* திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு?
திறவுகோல் என்பதன் பொருள் - சாவி
* ஒற்று எனப்படுவது - மெய்யெழுத்து
ஒற்றெழுத்தைச் சேர்த்து எழுதுக:
பாடலை + சொன்னேன் = பாடலைச் சொன்னேன்
கடவுளை + கண்டேன் = கடவுளைக் கண்டேன்
பழத்தை + தின்றேன் = பழத்தைத் தின்றேன்
கண்ணனுக்கு + கொடுத்தேன் = கண்ணனுக்குக் கொடுத்தேன்
மதுரைக்கு + செல்வோம் - மதுரைக்துச் செல்வோம்

இதை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி