மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி கருப்பு பணம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி கருப்பு பணம்!

புதுடில்லி: நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் புழங்குகிறது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோசடியில், பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கும், தங்கள் வாரிசுகளை மருத்துவர்களாக ஆக்க வேண்டும் என ஆசைப்படும் தனி நபர்களுக்கும் பங்கிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 27 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில், 30 சதவீத இடங்களை, அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக் கொள்ளலாம். அந்த வகையில் 8,100 எம்.பி.பி.எஸ்., மாணவர் இடங்கள், ஆண்டுதோறும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினரால், பணம் பெற்றுக்கொண்டு நிரப்பப்படுகின்றன.
இப்போதைய நிலவரப்படி, எம்.பி.பி.எஸ்., இடத்திற்கு, குறைந்தபட்சம் 55 லட்சம் ரூபாய் முதல், அதிகபட்சம் 75 லட்சம் ரூபாய் வரை விலை உள்ளது. கேரளாவில் குறைந்தபட்சமாக, 55 லட்சம் ரூபாயும்; தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவக் கல்லூரிகளில், ஒரு இடத்திற்கு 75 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை பெறப்படுகிறது.
ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும், தங்கள் வசம் உள்ள இடங்களில், 30 சதவீத இடங்களை, தாங்களே பணம் பெற்றுக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்ற வகையில், ஒரு ஆண்டுக்கு, சராசரியாக 5,000 கோடி ரூபாய் அவர்கள் வசம் புரளுகிறது.
ரூ.2,500 கோடி
இது ஒருபுறமிருக்க, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான ஒரு இடத்திற்கு, 1.5 கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை கேட்டு பெறுகின்றன. குறிப்பாக, ரேடியோலஜி எனப்படும், மின்காந்தவியல் பட்ட மேற்படிப்பு, மகளிர் நோய், மகப்பேறுவியல் பட்ட மேற்படிப்பு போன்ற சில படிப்புகளுக்கு, மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் கொடுக்க, ஏராளமான டாக்டர்கள் தயாராக உள்ளனர்.
அந்த வகையில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஒரு ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 2,500 கோடி ரூபாயை திரட்டி விடுகின்றன.
கறுப்பு பணம்
இன்னும் ஒருபடி மேலே போய், சில மாநிலங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில், 80 சதவீத இடங்களை, அந்தந்த கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்ளலாம். எம்.பி.பி.எஸ்., மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை என்ற வகையில், இந்த கல்வி நிறுவனங்கள், 2,500 கோடி ரூபாயை திரட்டி விடுகின்றன. இவ்வாறு, ஒரு ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை, மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் திரட்டி விடுகின்றன.
அந்த பணம், பெரும்பாலும் கறுப்பு பணம்தான். முறையாக, வருமான வரி செலுத்தி, 75 லட்சம் ரூபாயை சாதாரணமானவர்களால் திரட்ட முடியாது. தங்களின் வருமானத்தை குறைத்து காண்பித்து, பலவிதங்களில் சம்பாதித்த பணத்தை மறைமுகமாக சேர்த்து வைத்து, வெள்ளையும், கறுப்புமாக, 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கொடுத்து, தங்கள் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிக்கின்றனர். இவ்வாறு கொடுக்கப்படும் பணம், அப்பட்டமான கறுப்பு பணம்தான் என அடித்து சொல்கிறது, கறுப்பு பணத்தை ஆராயும், சமூகநல அமைப்பு ஒன்று.
எகிறும் நிர்வாக கோட்டா
சில மாநிலங்களில், நிர்வாகத்தினர் கோட்டா, 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உதாரணமாக, மத்திய பிரதேசம் உட்பட சில மாநிலங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்..,) கோட்டா 15 சதவீதமாகவும், நிர்வாகத்தினருக்கான கோட்டா 44 சதவீதமாகவும் இருக்கும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள், 60 சதவீத இடங்களில், தாங்கள் நிர்ணயிக்கும் விலையில், மருத்துவ மாணவர்களை நிரப்பிக் கொள்ளலாம்.


6 comments:

  1. ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான்.

    மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்..

    ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.
    இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான்.
    ஆனாலும் கேட்கவில்லை.

    வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.
    மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான்.
    "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா?
    எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு

    "மகன் மெல்லக்கேட்டான்:

    "மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா?

    ReplyDelete
  2. Cooperative result? Friends please tell me.

    ReplyDelete
  3. Cooperative result? Friends please tell me.

    ReplyDelete
  4. iam also waiting for that result.

    ReplyDelete
  5. please tell anyone,what about cooprative result

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி