மனிதனுக்கு பயன்படும் 2014ன் "டாப் 5' கண்டுபிடிப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

மனிதனுக்கு பயன்படும் 2014ன் "டாப் 5' கண்டுபிடிப்புகள்

2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளை அமெரிக்காவின் பிரபல டைம்' இதழ் வரிசைப்படுத்தி உள்ளது. இதோ அவை:


ரியல்-லைப் ஹோவர் போர்டு:


1989ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படத்தில் ஹோவர் போர்டு (மிதக்கும் பலகை) அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப்படத்தில் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஹோவர் போர்டு தற்போது நிஜத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து சில அங்குலம் உயரத்தில் மிதந்து இதில் பயணம் செய்யலாம். இதன் பேட்டரி 15 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. நிலநடுக்கத்தின் போதும் மிதந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,32,700.




ஆப்பிள் வாட்ச்:


ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கைக்கடிகாரத்தை மொபைல், கம்ப்யூட்டர் போல பயன்படுத்தலாம். இதன்மூலம் மொபைல், இன்டர்நெட் பார்க்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இதை மணிக்கட்டில் கட்டிக்கொள்வதன் மூலம் உடலின் வெப்பநிலை, தன்மை போன்றவற்றை அறியலாம். பயணத்தின் போது திசைகாட்டியாகவும் பயன்படுகிறது. கவர்ச்சிகரமான மாடல்களில், 18 காரட் தங்கம் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.22 ஆயிரம்.



பாதுகாப்பான "பிளாக் போன்':

மொபைலில் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பாக இருக்க விரும்புபவர்கள் "பிளாக் போனை' வாங்கலாம். போன் ஒட்டுக்கேட்பு, தகவல்கள் திருடல் போன்றவற்றை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உளவுத்தகவல்களை எட்வர்டு ஸ்னோடன் வெளியிட்டார். இதுபோன்ற பிரச்னைகளை சிக்காமல் இருக்க அமெரிக்கர்கள் பாதுகாப்பான போனை விரும்புகின்றனர். அவர்களை கருத்தில் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.40 ஆயிரம்.



உடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் "சிப்':

தவறான முறையில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் போது முதுகுவலி ஏற்படும். இதனை தவிர்க்க தவறான முறையில் அமரும் போது எச்சரிக்கை செய்யும் "சிப்'-யை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அமர்ந்திருக்கும் போது கழுத்து, முதுகுதண்டுவடம், கால்கள் சரியான நிலையில் இல்லாமல் இருந்தால், இக்கருவி அதிர்வை உண்டாக்கி எச்சரிக்கை செய்யும். தொடர்ந்து நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ.6,300.



கோபன்ஹேகன் வீல்:


சைக்கிள் பயணத்தால் உடலுக்கும் நன்மை, சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படாது. கோபன்ஹேகன் வீலை சைக்கிளின் பின் சக்கரத்தில் பொருத்திக் கொள்ளலாம். இது மலைப்பகுதி, மேடான பகுதிகளில் பயணத்தை எளிதாக்குகிறது. பேட்டரி மூலம் செயல்படும் இச்சக்கரத்தில் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் உள்ளது. இதிலுள்ள சென்சார் மூலம் சாலையின் தன்மை, காற்று வீசும் திசை, வெப்பநிலை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். நல்ல பாதையை காட்டும் வழிகாட்டியும் இதில் உள்ளது. சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த கோபன்ஹேகன் வீல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.50 ஆயிரம்.

"டாப் 5' தொழில்நுட்ப அறிமுகங்கள்:

மங்கள்யான்:


குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் இந்த ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. ஒரு ஆங்கில திரைப்படத்தை தயாரிக்க ஆகும் செலவை விட, குறைந்த செலவில் இஸ்ரோவால் இது தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டு செப்.24ல் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்ற நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விதமாக ஐந்து உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் தயாரிப்பு செலவு ரூ.450 கோடி.


அணுக்கரு இணைவை உணரும் அணுஉலை:


பொதுவாக அணுஉலைகள் அணுக்கரு இணைவை உணருவதில்லை. இதனால் அணுக்கழிவை அப்புறப்படுத்துவது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீடு மார்டின் நிறுவனம் அணுக்கரு இணைவை உணரும் அணுஉலையை கண்டுபிடித்துள்ளது. காந்த கண்ணாடியை கொண்டு இதை வடிவமைத்துள்ளனர். இது அணு இணைவை உணருவதோடு மட்டுமல்லாது அதை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அணு மின்சார உற்பத்தியில் இந்த கண்டுபிடிப்பு பெரிதும் துணைபுரியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


வயர்லஸ் எலக்ட்ரிசிட்டி:


கம்பியில்லா தொடர்புகள் மூலம் இன்டர்நெட், மொபைல் போன்கள் இயங்குகின்றன. தற்போது வயர் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தும் முறையும் கண்டறியப்பட்டுள்ளது. டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம் இந்த முறையை வடிவமைத்துள்ளது. எலக்ட்ரிக் கார் மற்றும் லேப்டாப்களுக்கு இந்த முறையில் சார்ஜ் செய்யலாம். மின்காந்தப்புலம் கொண்ட இந்த காயிலை பிளக்கில் சொருகி, எட்டு அடி தூரமுள்ள பொருட்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இன்னும் பத்து ஆண்டுகளில் வீடுகளில் வயர் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தும் முறையை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


3-டி பிரின்டர்:

எந்த பொருளையும் நேரில் பார்ப்பது போல் இருக்கும்படி, தத்ரூபமாக நகல் எடுக்கும் 3-டி பிரின்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒலியை பயன்படுத்தியும் இதில் பிரின்ட் எடுக்க முடிவது சிறப்பு. அதாவது தாமரை என ஒலி எழுப்பினால், தாமரை பூவை 3-டியில் பிரின்ட் எடுத்து கொடுக்கும். பெரிய நிறுவனங்கள் இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளன. பள்ளிக்குழந்தைகளுக்கு பாடங்களை விளக்க இந்த பிரின்டர் பெரிதும் பயன்படும்.


மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ 3:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் புரோ 3 டேப்லட் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. 12 அங்குல அளவு கொண்ட இதை லேப்டாப் போலவே கீபோர்டை இணைத்து பயன்படுத்தலாம். எளிதில் எடுத்து செல்ல முடியும் என்பதால் டாக்டர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த டேப்லட் பெரிதும் பயன்படும். இதன் விலை ரூ.50 ஆயிரம்.

2 comments:

  1. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்

    Advance happy new year

    வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி