மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள, நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்ற பணிகளில் காலியாக உள்ள, நீதிபதி நேர்முக உதவியாளர் 57; நேர்முக உதவியாளர் 7; உதவியாளர் 37; கணினி இயக்குபவர் 28 மற்றும் தட்டச்சர் 139 என, 268 பணியிடங்களுக்கு, கடந்த பிப்., 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இத்தேர்வில், 27,983 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான, திறனறி தேர்வுக்கு, ஒரு பதவிக்கு, 20 பேர் என்ற விகித அடிப்படையில், 3,631 பேர் அனுமதிக்கப் பட்டனர். இதில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட, 221 விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் ஜன., 5ம் தேதியும், நேர்காணல், ஜன., 6, 7 மற்றும் 8ம் தேதிகளிலும், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு, கூறப்பட்டு உள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி