2016-ல் அனைத்து கிராமங்களுக்கும் பிராட் பேண்ட வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

2016-ல் அனைத்து கிராமங்களுக்கும் பிராட் பேண்ட வசதி

2016-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு பிராட்பேண்ட வசதி கிடைக்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என டிராய் சேர்மன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிராய் தலைவர் ராகுல் குல்லார் கூறியதாவது,:: நாட்டில்தற்போது 2.5லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் தற்போது அகன்ற அலைவரியான பிராட்பேண்ட் வசதி செய்து தர டிராய் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் 20 ஆயிரத்து 100 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் இந்தியா இன்டர் நெட் பயன்பாட்டில் முன்னேறி வருவதை காணும் போது இவை சாத்தியமாக கூடும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் செயலாக்குவது என்பது மிகவும்எளிமையான என தெரிவித்துள்ளார்.

முதலில் நான்கு மெட்ரோ நகரங்களை பிராட் பேண்ட் வசதியுடன் இணைக்க வேண்டும் அதனையடுத்து மெட்ரோ நகரங்களுடன் இரண்டாம் கட்ட நகரங்களை இணைக்க வேண்டும். பின்னர் அனைத்து தாலுகா மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைக்க வேண்டும். இந்த இணைப்புகள் அனைத்தும் 2016ம் ஆண்டு டிசமபர் மாதம் இறுதிக்குள் முடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்ஏற்கனவே இரண்டு தனியர் நிறுவனங்கள் 75 சதவீத பிராட் பேண்ட் வசதியினை வழங்கிவருகின்றனர். இன்று ஒரு தனியார் நிறுவனம் அனைத்து மாவட்டங்களுக்கும் 89 சத வீத பிராட் ÷ண்ட் வசதியினை கொடுக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.அப்படி இருக்கும் நிலையில் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இந்த தி்ட்டம் சாத்தியமே என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி