2016ல் சி.ஏ., படிப்புக்கு புதிய பாடத்திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

2016ல் சி.ஏ., படிப்புக்கு புதிய பாடத்திட்டம்.


சி.ஏ., படிப்புக்கு, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், 2016ல் அறிமுகம் செய்யப்படுகிறது,'' என, ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி தெரிவித்தார்.
இந்திய பட்டயக் கணக்காளர் கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.,), கோவை கிளை மற்றும் சி.ஏ., மாணவர்கள் சங்கம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கு, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், நேற்று துவங்கியது.அகில இந்திய பட்டயக் கணக்காளர் கூட்டமைப்பின், முன்னாள் தலைவர் ராமசாமி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், ''நாட்டின் பொருளாதாரவளர்ச்சியில், ஆடிட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைவரும், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

விரைவில், அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி பேசுகையில், ''முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட சி.ஏ., பாடத்திட்டம், வரும்2016ல் வெளிவர உள்ளது.பாடத்திட்டம் சிறப்பாக அமைய, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சி.ஏ., மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, இரண்டு மடங்காக, சமீபத்தில் உயர்த்தப்பட்டு உள்ளது,'' என்றார்.கருத்தரங்கு, இன்று நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி