B.Ed - 2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

B.Ed - 2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.

இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

10 comments:

  1. ஆசிரியர் பல்கலைகழகங்கள் கல்வியியல் கல்லூரிகளை சரியாக கண்காணித்தலே போதும் ஆசிரியர் கல்வி தரம் உயரும். இன்று தமிழ்நாட்டில் உள்ள 90% கல்வியியல் கல்லூரிகள் மாணவர்களை மறைமுகமாக இர்ரெகுலர் [ கல்லூரிக்கே செல்வதில்லை ] முறையிலேயே சேர்க்கையை நடத்துகிறது. இதற்கு ஆசிரியர் பல்கலைகழகமும் துணை போகிறது. பல்வேறு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் செய்முறை, எழுத்து தேர்வுக்கு மட்டுமே கல்லூரிக்கு வருகிறர்கள், மாதிரி ஆசிரியர் பயிற்சிக்கு கூட செல்வதில்லை. ஆசிரியர் பல்கலைகழகமும் கல்லூரிகளும் சரியாக செயல்பட்டலே போதும் 10 மாதத்திலே சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியும்.

    ReplyDelete
  2. To make a better teacher education all institutions must follow this norms and regulation.

    ReplyDelete
  3. First b.ed m.ed padikka entrance vainga pa

    ReplyDelete
  4. One year bed sariyaga irunthatu. Thevaiyanal teaching practice kalathai 2 mathamaga athigapaduthalam.

    ReplyDelete
  5. B.ed ethanai varusam padichalum Tet pass pannuna than velai.

    ReplyDelete
  6. B.ed ethanai varusam padichalum Tet pass pannuna than velai.

    ReplyDelete
  7. Tet pass pannina ellorukum velai kidaipathilai. Idhai yar sari pannuvargal?

    ReplyDelete
    Replies
    1. இப்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் தான் சரி செய்ய வேண்டும். திறம்பட தங்கள் பணியை செய்து, பெற்றோர்களின் மனதில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். எவ்வாறு மேல் படிப்பிற்க்கு (MEDICAL & ENGINEERING) அரசு கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதைப் போல பள்ளிபடிப்பிற்க்கும் அரசு பள்ளிகளை தேர்திதெடுக்கும் நிலை வரவேண்டும்.

      Delete
    2. What u said that s correct sir,,then only govt school will improve, students strength also will increase,then vacancy also increased,total society will improve,,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி