கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2014

கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்


கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், போக்குவரத்து கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால், கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

ஊழியர்கள் ஸ்டிரைக் :

சம்பள உயர்வு, நிரந்தர பணி நியமனம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். அண்ணா தொழிற்சங்கம் நீங்களாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பஸ்களே அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டு வந்ததன. போராட்டத்தை வாபஸ் பெறுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அமைச்சருடன் பேச்சு :

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சவுந்தரராஜன் பேசுகையில், ஊழியர்களின் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். பேச்சுவார்த்தைக்கான முத்தரப்பு குழு ஓரிரு நாளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தை திரும்ப பெற தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும் பணி இன்றும், நாளையும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி