ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2014

ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்


ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.
ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி தகவல் தொகுப்பு விவர மைய ஆணையர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 327 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களின் கணக்குகள் தணிக்கை முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள 63 அலுவலகங்களின் தணிக்கை இன்னும் முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த 63 அலுவலகங்கள் இன்னும் ஆவணங்களை அனுப்பவில்லை. மேலும், விழுப்புரம், நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கீழ் வரும் உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை சேர்ந்த அலுவலர்கள் கணக்கு தணிக்கையை முடிக்க ஒத்துழைக்கவில்லை.இந்த கணக்கு தணிக்கை வரும் 26ம் தேதிக்குள் (நாளை) முடித்து அதன் விவரங்களை சென்னையில் உள்ள மாநில கணக்கு தணிக்கை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தும் இன்னும் மேற்கண்ட அலுவலகங்கள் விவரங்களை அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கணக்கு தணிக்கை செய்ய போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் இன்னும் ஒத்துழைப்பு தராத அலுவலர்களை தொடக்க கல்வித்துறை கண்டித்துள்ளது. இருப்பினும் தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் இந்த பணியை முடிக்காமல் உள்ளதால் அரசுப் பணிகள் நன்னடத்தை விதியை மீறியுள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதனால், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கைஎடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளையுடன் கெடு முடிவதால் மேற்கண்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி