நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2014

நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்


மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.
தமிழகத்தில் 2007ல் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தற்போது மாவட்ட கல்வி அலுவலருக்கான (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனல் தயாரிக்கப்படுகிறது. மாநில அளவில் 600 பேர் வரை இந்த பேனலில் உள்ளனர்.

தகுதியுள்ள தலைமையாசிரியர்கள் பெயர்களை பேனலில் சேர்க்க தற்போது டி.இ.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில் டி.இ.ஓ., ஆக விருப்பமா அல்லது மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக விருப்பமா என முன்கூட்டி தெரிவிக்க வேண்டும் எனவும் டி.இ.ஓ., பதவி உயர்வு கோரியவர் அவர் தலைமையாசிரியராக பணிபுரிந்த காலத்தில் இருந்த டி.இ.ஓ.,க்கள் வழங்கும் நற்சான்று இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல டி.இ.ஓ.,க்கள் பணி ஓய்வு பெற்று சென்றதால் அவர்களை தேடி தலைமையாசிரியர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:2007 முதல் 2014 வரை ஒரு தலைமையாசிரியர் பல டி.இ.ஓ.,க்களின் கீழ் பணியாற்றியிருக்கலாம்.

அவர்களில் பலர் தற்போது ஓய்வு பெற்று எங்கு இருக்கிறார்கள் என தெரியாது. அவர்களை தேடி பிடித்து நற்சான்று பெறுவது கடினமான விஷயம். அவர் பணியாற்றிய காலத்தில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் குறித்து அவர் அளித்திருக்கும் நற்சான்றை அதிகாரிகள் தற்போது ஏற்றுக்கொள்ள வேண்டும். 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டு பேனலுக்கு தகுதியானவர்களிடமும் தற்போதே விருப்ப பதவி உயர்வு கேட்டிருப்பதை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி