ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

ஆசிரியர் செயல்திறன்~ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பில் மாணவரின் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்த, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும், நடப்பு கல்வியாண்டு முதல், ஆசிரியர் செயல்திறன்மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் தாங்களாகவே தங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும், வகுப்பில் எதிர்பார்த்த நிலையை அடையவும், தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாட்டை ஆய்வு செய்து, அதன் மூலம் தேவையான முன்னேற்ற ஆலோசனைகள் வழங்க இத்திட்டம் வகுக்கப்பட்டது.நான்கு நிலை அளவுகோலினைஅடிப்படையாக கொண்டு, வகுப்பறை நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை அளவிட தர அளவீடுகள் வடிவமைக்கப்பட்டது.

எதிர்பார்த்த நிலைகளை அடையாமை, நெருங்குதல், அடைதல், மேல், என நான்கு தர அளவீடுகள் வகுக்கப்பட்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 12 பக்கம் அடங்கிய படிவம் சமீபத்தில் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் ஈரோடு, கோபி ஆகிய இரு கல்விமாவட்டகளுக்கும் வழங்கப்பட்டது. வகுப்பாசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களை, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆய்வு செய்து, அந்தந்த படிவத்தை, யூனியன்வாரியாக உள்ள வட்டார வளமையங்களுக்கு அனுப்பியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 14 யூனியனுக்கும், பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விபரங்களும், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடுக்கு என உருவாக்கப்பட்ட, ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

வகுப்பு, பாடம், மொத்த மாணவர்கள், 40 சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள், 80 சதவீதம் வரை அல்லது அதற்கு மேல் மார்க் எடுத்தவர்கள், மதிப்பீடு மற்றும் பின்னூட்டம், மாணவர்களுடனான உறவு முறை, சக பணியாளர்களுடன் உறவு முறை, பணியிட பயிற்சி, பங்கேற்றல் மற்றும் சுயகற்றல், புதுமைப்படைத்தல் மற்றும் ஆய்வுகள் படைத்தல், பள்ளி வளர்ச்சி செயல்பாடுகளில் பங்கு கொண்டு உதவுதல், ஆசிரியர் வருகை, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.மதிப்பீட்டில் ஆசிரியர் முழு திருப்தி அடைந்தது மற்றும் முன்னேற்றம் அல்லது உதவி தேவை குறித்து சுருக்கமான விபரம், தலைமை ஆசிரியரின் குறிப்பு, குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநரின் குறிப்பு மற்றும் தொகுக்கப்பட்ட படிவத்தின் விபரங்கள் என அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.

15 comments:

  1. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்

    Advance happy new year

    வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Thank you and wish you the same

      Delete
    2. Akillan ji thank you.wish you the same.I hope may god help us from coming this new year.

      Delete
    3. Advance happy New year friends

      Delete
  2. Replies
    1. Yesterday yours answer is good..alex sir...lot of thanks for u.

      Delete
  3. Alex sir;
    82 to 89 posting poda vandum andru nangal katkavillai! Idhu government decision......Government a posting Koduthu vittu, court neeka sollum andral.............?
    Naaangal seidha thavaru anna?

    ReplyDelete
    Replies
    1. Saravanan sir,
      Dont worry, join paninavangaluku entha problmum varathu. We r asking our rights only.

      Delete
    2. Sorry Mr Saravanan.

      At this juncture no body has right to blame you people. All you are trapped that is all. Although the case is very strong against Government, the Govt. would not leave you alone, because they are in a position to safe guard their stand. I presume that SC also would consider humanitarian ground to safe guard you. Let us hope the best.

      Delete
  4. Nanga ungala on um solala saravanan sir .govt againsta than case file pannirukom..

    ReplyDelete
    Replies
    1. 82 to 89 marks eduthavanga pesama than irunthom. Govt relaxation kuduthanga Relaxation candidates enna thappu pannninom

      Delete
    2. 82 to 89 marks eduthavanga pesama than irunthom. Govt relaxation kuduthanga Relaxation candidates enna thappu pannninom

      Delete
  5. Wish U Happy New Year 2 all my friends & Thanks to all welwishers.

    ReplyDelete
  6. மேலே உள்ளவர்கள் வெளிப்படையாக பேசியுள்ளீர்கள். Really you are all great. உங்க மேலே எந்த தவறும் இல்லை. ஆனால்....90 மார்க் வாங்கி, நாங்கெல்லாம் சென்னையில போராட்டம் நடத்திகொண்டிருக்கும்போது 82 to 89 மார்க் வாங்கி வேலைக்கு போனவர்கள் எப்படியெல்லாம் வசைபாடினார்கள் என்று தெரியுமா? எங்களையெல்லாம் ஒரு தீவிரவாதிகளாக,ஏன் தேசதுரோகிகளாக நினைத்தார்கள் தெரியுமா உங்களுக்கு. அப்பக்கூட நான் என்னை பற்றி கவலைபடல. அவர்கள் ஆசிரியர்கள். நாங்களும் ஒரு நாள் ஆசிரியர்களாக வருவோம் என்று அவர்கள நினைக்கவில்லயே.
    இந்த அளவிற்கு பேசிய ஆசிரியர் நன்பர்கள் எப்படி ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்பதனை கேட்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. I welcome your stand Mr Sankar Indian.

      வன்கொடுமை சட்டம் பாயும் என்ற ஒரு வரியை நீங்கள் விட்டுவிட்டீர்கள். ஆசிரியர்கள் இப்படியும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பார்களா என்ற சந்தேகத்தோடு, எப்படி இவர்கள் வருங்கால மாணவர்களை வழி நடத்தப்போகிறார்கள் என்ற அச்சம் வேறு தொத்திக்கொண்டது.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி