தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ்2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.
சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும் என கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சில பள்ளிகளில் 5 முதல் 10 வரையிலான 'லேப்டாப்' திருடு போயுள்ளதால், அதற்கு ஈடான பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
தமிழ்நாடு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜபாண்டியன் கூறியதாவது:- பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லை. பள்ளிக்கு வந்த 'லேப்டாப்'பை மாணவர்களுக்கு வழங்க காலம் தாழ்த்துவதால் பாதுகாக்க முடியாது. தலைமையாசிரியர்கள் பணம் செலுத்தாவிட்டால் எந்த வித பயனும் கிடைக்காது என மிரட்டுகின்றனர். இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் புகார் தெரிவிக்கஉள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி