எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார்.

தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில், “நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன் தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு ஓடினான்,” என்றார்.

பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

11 comments:

  1. சபாஷ் பலே பலே வா

    ReplyDelete
  2. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    இன்றைய 27.12.14 (சனிக்கிழமை)
    தினத்தந்தி பதிப்பில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு தொல் . திருமாவளவன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்

    ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் மட்டும் இன்னும் ஆசிரியர் நியமனம் நடைபெறதது மிகவும் கண்டத்திற்கு உரியது என்றும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்

    தலைவர் திரு தொல். திருமாவளவனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

    மேலும் இனி எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டன அறிக்கை விடுவார்கள்
    நமது பிரச்னையை பெரிய பிரச்சனை ஆக்குவார்கள் என்று தமிழக அரசிற்கு நன்கு தெரியும்
    எனவே ஜனவரி முதல் வாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்

    ReplyDelete
  4. நண்பர்களே வணக்கம்

    ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் பணி பெற தவமாய் தவமிருக்கும் எனது சகோதர, சகோதரிகளே , நண்பர்களே இன்று கல்வி செய்தியில் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் பதில் அளிக்கிறேன்

    மேலும் யார் யார் பணிக்கு செல்வார்கள் என்ற தகவலும் இன்று பதிவிடுகிறேன்


    நன்றி

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி கல்வி செய்தி ADMIN Sir இந்த தகவலை
    தங்களது வலை தளத்தில் பதிவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  6. நமது வேண்டுகோளை ஏற்று கண்டன அறிக்கை கொடுத்த விடுதலை சிறுத்தை தலைவர் தொல் . திருமாவளவன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  7. ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தி வருகிறது. ஆசிரியர்களை நியமனம் செய்யும் நடைமுறையில் தமிழக அரசின் ஓரவஞ்சனையான அணுகுமுறை வெளிப்படுகிறது.

    குறிப்பாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 100 விழுக்காடு ஆசிரியர் நியமனங்களை நிறைவேற்றியிருக்கிற அரசு, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் ஆதி திராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

    தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஓவியம், இசை, கைத்தறி போன்ற துறைகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ரூ.5,000-க்கு மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை முழு நேர ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

    ReplyDelete
  8. Still no pg has been recruited in kallar reclamation. Delay without any valid reason......why?

    ReplyDelete
  9. Pg second list whn will come sir

    ReplyDelete
  10. Still No information has been given by TRB. Wt can we do?

    ReplyDelete
  11. Still No information has been given by TRB. Wt can we do?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி