இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2014

இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்


மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டுமறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் 128 புதிய தொடக்க பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் புதிய பணியிடங்களுக்கு மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான 'கவுன்சிலிங்' நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் இடையபட்டி, வாகைக்குளம், சோமசுந்தபுரம், ஜாரி உசிலம்பட்டி ஆகிய நான்கு புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் வடக்கம்பட்டி உயர்நிலை பள்ளிபணியிடங்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நேற்று 'கவுன்சிலிங்' நடந்தது.இதுதொடர்பாக தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள்தகவல் தெரிவித்து காலையில் பங்கேற்க உத்தரவிட்டனர். சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் அடித்து பிடித்து 'கவுன்சிலிங்கில்' பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர்.ஆசிரியர் ஒருவர் கூறுகையில் "இவ்வளவு அவசர அவசரமாக 'கவுன்சிலிங்'நடத்த வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை. மர்மமாக உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி