இப்படியும் சில மனிதர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

இப்படியும் சில மனிதர்கள்

கடந்த 2013ம் வருட அக்டோபர் மாதத்தின் ஓர் இரவு நேரம். 23 வயது செல்வியின் மூச்சு கொஞ்சம், கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்தது. தரையில் கிடந்த செல்வியை அள்ளி மடியில் வைத்த சந்திரா, மகளின் முகத்தை பாசத்தோடு தடவிக் கொடுக்க, தாய் முகத்தை பார்த்தபடியே அடங்குகிறது அந்த உயிர். சந்திராவின் கண்களில் பெரும் நீர்திரள்!

நேரம் செல்லச் செல்ல, இந்திரா நகர் மக்கள் அந்த வீட்டின் முன் குவியத் தொடங்குகின்றனர். சந்திராவின் கைபிடித்து ஆறுதல் சொல்கின்றனர். அப்போது, சந்திரா முகத்தில் துளியும் சோகமில்லை. மாறாக, ஒரு பாரத்தை இறைவன் தோளில் இறக்கி வைத்த திருப்தி!செல்விக்கு என்னம்மா ஆச்சு?'10 நாளா கடுமையான வயித்துப்போக்குய்யா! 'மெடிக்கல் ஷாப்'புல மருந்து வாங்கிக் கொடுத்தேன். எதுக்கும் அடங்கலை! அக்டோபர், 2ம் தேதி ரொம்ப முடியாம போச்சு. மெடிக்கல் ஷாப்பை தாண்டி, டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போற அளவுக்கு என்கிட்டே காசு இல்லைய்யா! அதான், புள்ளையை கடவுள்கிட்டே கொடுத்துட்டேன். ஒருவகையில, அவ போனதுல எனக்கு சந்தோஷம்தான்! ஆமாய்யா... 22 வருஷமா கை, கால் வௌங்காம, பேச முடியாம, படுத்த படுக்கையா இருந்து என் புள்ளை ரொம்ப சிரமப்பட்ருச்சுய்யா'அன்று தன் மடியில் சுமந்த செல்வியை, இன்றும் மனதில் இருந்து சந்திரா இறக்கி வைக்கவில்லை என்பதை, அவரது தழுதழுத்த குரல் அப்பட்டமாய் சொல்லியது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. 43 வயதாகும் சந்திராவுக்கு, சோதனைகளைத் தவிர, சொல்லிக் கொள்ளும்படியாக ஏதுமில்லை. கணவர் கனகராஜுக்கு 52 வயதாகிறது. வேலைக்கு ஏதும் செல்ல முடியாமல், வீட்டோடுதான் இருக்கிறார். சந்திராவைப் போல் சோகத்தை தாங்கும் சக்தி அவருக்கில்லை என்பதால், தன் சோகத்தை 'டாஸ்மாக்'கில் இறக்கி வைத்து தள்ளாடுகிறார். அவரோடு சேர்த்து, சந்திரா சமாளிக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 5.

வாழ்க்கை மேல வெறுப்பு வரலையாம்மா?

'எதுக்குய்யா வரணும். 'சந்திராவால மட்டும்தான் முடியும்'னு கடவுள் நினைச்சதாலேதானே, 5 புள்ளைகள்ல 4 புள்ளைகளை இப்படி ஊனமாக்கி படுக்க வைச்சிட்டாரு! நான் பார்ப்பேன்யா... என் ஜீவன் இருக்கிறவரைக்கும் என் புள்ளைங்களை நான் பார்த்துப்பேன்.

இதுக இப்படி ஆனவுடனே, 'இதுகளால உனக்கு என்ன ஆகப்போகுது. பேசாம, அஞ்சாறு நெல்லை எடுத்துப்போட்டு கொன்னுரு'ன்னு, ஊர்ல எல்லாரும் சொன்னாங்க! நான் பெத்த புள்ளைகளை என்னால கொல்ல முடியுமாய்யா? அப்பவே வாழ்க்கை மேல வெறுப்பு வரலை. இனிமேலா வந்துரப் போகுது!'

'செல்வா...சுகன்யா... அம்மா உங்களை நல்லா பார்த்துக்கறேனாப்பா?'

'ஆஆங்ங்ங்ங்...'

சந்திரா கேட்க, பாசமொழி பேசுகின்றனர் பிள்ளைகள்.

ஒன்றரை வயது முதல் இக்குழந்தைகளின் நிலை இதுதான்! உடுத்த உடை இல்லாமல், தன் தாயின் புடவையில், 23 வயது செல்வனும், 21 வயது சுகன்யாவும் மானம் மறைத்து கிடக்கின்றனர். இறந்து போன செல்விக்கு அடுத்தவன் செல்வா. அவனுக்கு அடுத்தவள் சுகன்யா. இருவரின் இயற்கை உபாதைகளும், சுகன்யாவின் மாத தொந்தரவுகளும் அந்த அறையில்தான்; தரையில்தான்!அந்த சின்னஞ்சிறு வீடு முழுக்க ஒருவித துர்நாற்றம். ஆனால், துளிகூட சந்திராவின் முகம் அதை பிரதிபலிக்க வில்லை. சுகன்யாவுக்கு அடுத்தபடியாக, ஒரு பெண்பிள்ளை இருக்கிறாள். அவளது பெயரைச் சொல்லி அழைப்பதை விட, 'என் நடக்கிற பொண்ணு' என்றுதான் ஆசையோடு சொல்கிறார் சந்திரா. பிளஸ் 1 படிக்கும் அவளுக்கு அடுத்தபடியாக, 15 வயது அந்தோணிராஜ். அவனது கை, கால்கள் செயலிழந்து விட்டாலும், அவனுக்கு பேசும் சக்தி மட்டும் உண்டு!உங்களுக்கப்புறம் இவங்க நிலைமை?

'நினைச்சா பயமா இருக்குய்யா! என் ஜீவன் முடியறதுக்குள்ளே இதுக போய் சேர்ந்துரணும். பைசா வருமானம் இல்லாம, இதுகளை வளர்த்துட்டு இருக்கறேன். அரசாங்கம் ஆளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை தர்றாங்க. அதுவும் 2 மாசத்துக்கு ஒருதடவைதான் வருது. எனக்கப்புறம் இதுக இருக்கக்கூடாது சாமி! ஆனா, ஒண்ணுய்யா... இன்னொரு ஜென்மம் எடுக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. அதுலேயும் இதுகதான், என் புள்ளைகளா இருக்கணும். இதுக இப்படியே இருந்தாலும், நான் பார்த்துப்பேன்யா!'அடுத்த கேள்விக்கு, நா எழவில்லை! விடைபெற்றோம். மனதிற்குள் ஒரே ஒரு கேள்வி... 'எந்த மனிதனும் உன் சிலையை பிழையோடு படைப்பதில்லை; நீ மட்டும் ஏன் கடவுளே?'ஒரே ஒரு வார்த்தையில்...மரணம் வரை மனிதன் இழக்கக்கூடாத உணர்வு எது?சந்திரா: மகிழ்ச்சி

16 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thalai vanangugiren Amma. Yaraiyo solkindranar Amma endru. Neengale Amma. Andavanai thitta kooda manam illai vaalum theivam nee iruppathal.

    ReplyDelete
  3. Salute to your patience. True word that God has chosen you to bear such a sorrows. Let us pray for you to have peaceful life for safeguard your children

    ReplyDelete
  4. Padikum pode kannil nir thuli vandu vitathu amma ungalin pasam endrum poithu vidathu. I salute sandra ma

    ReplyDelete
  5. 'எந்த மனிதனும் உன் சிலையை பிழையோடு படைப்பதில்லை; நீ மட்டும் ஏன் கடவுளே?'

    ReplyDelete

  6. ஆயிரம் தான் கவி சொன்னேன்
    அழகழகா பொய் சொன்னேன்
    பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
    காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
    ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

    எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
    எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
    எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
    எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

    பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
    என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
    வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
    வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
    வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

    கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
    இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
    கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
    இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
    கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
    தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
    இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
    நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

    கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
    கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
    கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
    கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
    தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
    மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

    கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
    சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
    கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
    அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

    தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
    கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
    கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
    தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

    வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

    பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

    பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
    காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

    கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
    பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
    அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
    பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

    படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
    கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
    பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
    வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

    வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
    கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
    எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
    உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????
    -வைரமுத்து

    ReplyDelete
  7. Dear Admin, kankal kalanki villana. pesa vaarththakal illai. Ithu pool pathividumpothu, varkalukku uthava, avarkalidaiya mukavari allathi bank account details yeethavathu ondrai pathividavum. Nandri.

    ReplyDelete
  8. தலை வணங்குகின்றேன் தாயே!

    ReplyDelete
  9. இந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை
    சென்னை: மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டில் இனி ஆசிரியர் இடமாற்றம் கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ReplyDelete
  10. We r salute, u r best in the world

    ReplyDelete
  11. evarukal than unmaiyana manethan... manusa kutam innum erukuya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி