அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2014

அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு


காலிப்பணியிடங்களை நிரப்பவும், காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிவழங்கவும் ஆசிரியர் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.
திண்டிவனத்தை சேர்ந்த ஜி.நாகராஜன், நெல்லை மாவட்டம், மடத்தூரை சேர்ந்த சித்ரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் பிறகு தேர்வு நடைபெறவில்லை. கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:இதே கோரிக்கையுடன் வந்த பல ஆசிரியர்களுக்கு இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்து அவர்கள் மேலும் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் நீடிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சிகள் சார்பில்நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றுமனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இதை அரசுகவனத்தில் கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றிருந்தும் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களால் பணியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதை கருத்தில் கொண்டு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி