ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட காலக்கெடு கிடையாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2014

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட காலக்கெடு கிடையாது.


சென்னை: 'ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றின் செல்லத்தக்க காலம், இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், டிச., 2015, வரை நீட்டிக்கும் வகையில், அவற்றில், தற்போது, உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல் நேற்று வரை, 1.43 கோடி ரேஷன் கார்டுகளுக்கு, உள்தாள் ஒட்டும் பணி நிறைவு அடைந்துள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்கள், அவர்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களுக்கு, கடைக்கு சென்று, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி கொள்ளலாம். அந்த நாட்களில் செல்ல முடியாதவர்கள், சனிக்கிழமைகளில், உள்தாள் ஒட்டி கொள்ளலாம். உள்தாள் ஒட்ட, காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி