மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்

திண்டுக்கல்: 'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல் அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 'மத்திய அரசு ஆசிரியர்களை போல் ஊதிய உயர்வு அளித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி வரை கூடுதலாக செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். இதனால் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தனித்தனியாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் '1989 ல் இருந்து பெற்றுவந்த ஊதிய உரிமையை மீண்டும் பெற அனைவரும் ஒருங்கிணைந்து போராட தயாராக வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்

    Advance happy new year

    வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. WISH

    YOU

    HAPPY

    NEW


    YEAR

    FRIENDS


    WISH YOU ALL SUCCESS FOR EVERY ONE.........................

    ReplyDelete
  3. Thanks to all thanks for every thing. Thank you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி