ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2014

ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்!

டுமையாக எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் முடிவை ஏர்டெல் நிறுவனம் கைவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மற்றும்
கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது.

ஆனால், இந்த அதிர்ச்சி செய்தியை பலரும் எதிர்பார்க்கவில்லை. உலகெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எந்த விதமான
கட்டணமும் இல்லாமல் பேசும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாகத்தான் அமைந்தது.

ஏர்டெல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட இருந்த அந்த புதிய வாய்ஸ் கால் பேக் மூலம் 1MB ஒரு என 1ஜிபி டேட்டா, 3ஜி சேவையில் 4,000 ரூபாய் வரையிலும், 2ஜி சேவையில் 10,000 ரூபாய் வரையிலும் வசூலிக்க இருந்தது.

இதன்விளைவாக மக்கள் அனைவரும் அவரவர் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் #boycottairtel என்ற டேக்கில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்தனர்.
பலர் உண்மையாகவே ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணித்து வேறு நிறுவனங்களுக்கு தங்களது சிம்களை போர்ட் செய்தனர். இன்னும் சிலர் வாட்ஸ் அப் மூலம் "ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிப்போம்" என்று மெசேஜ்களை பார்வர்ட் செய்த வண்ணம் இருந்தனர்.



இது போன்ற பல பிரச்னைகளும், எதிர்ப்புகளும் கிளம்பியது. அதுமட்டுமன்றி நிறுவன ரீதியாகவும் ஏர்டெல் நிறுவனத்திற்கு பல நெருக்கடிகள் வரவே, மேற்கூறிய கட்டணம் வசூலிக்கும் முடிவை தற்போதைக்கு கைவிடுவதாகவும், இனி வழக்கம் போல் இணைய வாய்ஸ் அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் செய்தி வெளியீட்டால் ஏர்டெல் எதிர்ப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அவர்களின் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி கொண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி