சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2014

சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பி.காம். படித்த நான், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.ஆனால், என்னுடன் பணியில் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் ரூ.20 ஆயிரம் சம்பளத்துடன் 2ம் நிலை கண்காணிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். எனவே, சம்பள முரண்பாட்டை போக்க அமைக்கப்பட்ட கமிட்டி முடிவை விரைவில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மனு குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி