TNTET :ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2014

TNTET :ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும்பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன.அதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவுஅதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகுநீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட மனுதாரர்கள் அடங்கிய பிரிவு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள்ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டுயதுதான்.

எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. 1. இனிவரக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வில் பாஸ் மதிப்பெண் எவ்வளவு? 55% அல்லது 60%?
    2. 2013 தகுதித் தேர்வில் 56% எடுத்திருந்தால் பாஸா?
    3. அப்படி பாஸ் என்றால், TET PASS CONDITION - ஆல் தகுதிகாண் பருவம் முடிக்கப்படாதவர்களுக்கு, ’சலுகை மதிப்பெண்ணால் தேர்ச்சி’ என்பது தகுதிகாண்பருவம் முடிக்க கருத்தில் கொள்ளப்படுமா? ( 2 வருடம் முடிந்துவிட்டது).

    கொஞ்சம் யோசித்து சொல்லுங்க நண்பர்களே!!!

    ReplyDelete
  2. Pass pannunavankallukku velai illai ithula innru tet theivaya. high court 2013 tet nayamana thiruppu solliiruntha suprme court varai pokkuma high court summairunkappa. Irukka manaulaichalai pothum

    ReplyDelete
  3. Next tet is modified with proper relaxation and no weightage method. New selection method very soon

    ReplyDelete
    Replies
    1. Is there any possibity of giving appointment to already passed candidates of tet 2013

      Delete
  4. TRB ALREADY INFORM TET CASE 2013 1. WEITAGE CASE
    2.55 PERCENT
    3. ADI DRAVID
    THIS CAN SOLVE IN COURT NEXT TET WILL BE SOON .
    BUT ALL THE MATER IN COURT Hig , supreme court case filled. So TETTN it will be taken time

    ReplyDelete
  5. Pg 2nd list poduvagala illa welfer list mattum thana

    ReplyDelete
  6. 2013 la pass pannavargaluku posting podama tet vaika mattanga

    ReplyDelete
  7. Hi any one no 2marrow ramar and sudalai case hearing varuma ilaya

    ReplyDelete
  8. Akilan sir tommorow ramar case hearing or not

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி