பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என, பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த 2012ல், 5,000 ரூபாய் மாத சம்பளத்தில், 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கடந்தஏப்ரல் முதல், இவர்களின் சம்பளம் 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது, நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது. ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான ஊதிய உயர்வு தொகை, பின் வழங்கப்படும் என்றஅறிவிப்புடன், கடந்த இரண்டு மாதங்களாக, 7,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. முன் தேதியிட்ட ஊதிய உயர்வு தொகை, வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில், பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து, பகுதிநேர ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'முன் தேதியிட்ட சம்பள உயர்வு நிலுவை தொகையை, பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கினால், இந்த ஆண்டு சிறப்பான துவக்கமாக எங்களுக்கு அமையும். அரசின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றார்.

2 comments:

  1. Asiriyarkalin nilamai ipadi irukku

    ReplyDelete
  2. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி