கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2014

கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பூமி பூஜை செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.


கடந்த 1948ஆம் ஆண்டு, டெல்லியில் மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே (39) என்ற ஆர்.எஸ்.எஸ். இந்து மகாசபா உறுப்பினர் சுட்டுக் கொன்றார். இதையடுத்து, கோட்சேவுக்கு 1949ஆம் ஆண்டு நவம்பர் 8ஆதேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஒரு வாரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாக இந்து மகா சபை அறிவித்திருந்தது. மேலும், இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி உத்தரப்பிரதேச மாநிலம் மீரட், சீதாபூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அதன்படி, லக்னோ புறநகர் பகுதியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக இந்து மகாசபை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் முன்னாகுமார் சர்மா கூறுகையில், ''லக்னோ புறநகர், ஹைதர் கஞ்ச் என்ற இடத்தில் கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அந்தப் பகுதி மக்கள் தாமாகவே முன் வந்து கொடுத்துள்ளனர். விரைவில் அங்கு பூமி பூஜை நடைபெறும்.

மேலும், வருகிற ஜனவரி 30 ஆம் தேதிக்குள் இங்கு கோட்சேயின் மார்பளவு சிலை நிறுவப்படும். அன்றைய தினம் கோட்சேயின் தியாகத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்படும்'' என்றார்.

37 comments:

  1. வாய்யா வா ஆரம்பிச்சிட்டியா வேலைய்ய கோயிலையே கட்டுங்க நாடு விளங்கும்

    ReplyDelete
  2. தூக்கு தண்டனை? ???????பெற்றவனுக்கு கோயில்???????வாழ்க இந்திய ஜனநாயகம்

    ReplyDelete
    Replies
    1. Do you know that there are temples for kushpu and namitha?

      What about your sentence regarding these temples?

      Delete
    2. தூக்கு தண்டனை பெற்றவனுக்கு கோயிலா? சரியான கேள்விதான். ஆனால் சினிமாவுல ஆடையை அவுத்து போட்டுட்டு ஆடறவளுக்கு கோயில் கட்னாங்களா? இல்லியா? நாட்டு மக்களை வீனாக்கிற நடிகைகளுக்கு கோயில் கட்டும்போது, ஏன் கோட்சேவுக்கு கட்டகூடாது. சோல்லுங்க சார்.

      Delete
    3. மத சார்பற்ற இந்திய அரசு, தவறில்லை

      Delete
    4. Oru nadikaiyai vida mathaveri apathanathu...

      Delete
    5. நாத்தூராம் விநாயக் கோட்சே
      (மராத்தி: नथूराम विनायक गोडसे)
      (மே 19, 1910 – நவம்பர் 15, 1949)


      மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை விட இந்தியாவை அதிகம் நேசித்தவர் நாதுராம் விநாயக் கோட்சே.

      நவம்பர் 15- தூக்கில் தொங்கிய கோட்சேயின் வாக்குமூலம்

      கோட்சே -- இந்த மனிதனை மேற்கோள் காட்டியோ அல்லது ஆதரவாக கருத்து சொன்னாலோ ஒரு எதிரியை போல் பார்க்கப்படும் தேசத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது ...

      "இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"-- கோட்சே

      உலகம் முழுவதும் உத்தமராய் போற்றி வணங்கப்பட்ட ஒரு வயோதிகரை சிறிதும் ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த ஒரு மனிதனிடம் அப்படி என்ன நியாயம் இருந்துவிட முடியும் ..? என்ற மனோபாவத்தோடு காந்தியின் கொலைபற்றிய கோட்சேயின் வாக்கு மூலத்தை படித்த போது பல்வேறு சிந்தனைகளும் குழப்பங்களுமே மிஞ்சின ..!

      நீங்களும் படித்துபாருங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள் .

      டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-

      "தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.

      இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன். அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

      1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.

      முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.

      மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.

      Delete
    6. காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

      நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.

      அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. காந்தி வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.

      ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்

      தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

      காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

      நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

      பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

      நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.
      சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

      Delete

    7. முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

      15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

      பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

      சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

      பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

      1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினகூறினார் .

      Delete
    8. சமீபத்தில் எனக்கு "வாட்ஸ் அப்" ல் அனுப்பிய நண்பர்களின் பகிர்வு ...
      காந்தி யாருக்காக உயிர் இழந்தாரோ அவர்களில் பலர் அவரது "உயிரின் மதிப்பை" மறந்தும் , தனது மதத்தின் மதிப்பை கெடுப்பதிலேயே குறியாக நடக்கின்றனர் ...
      இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவின் அமைதியை குலைக்க கடும் முயற்சிகள் எடுக்கின்றனர் ...
      அவர்களை அடையாளம் கண்டு ..... நறுக்க வேண்டும் ....
      இது ஒவ்வொரு
      "ஹிந்துவின் கடமை அல்ல "...

      "ஒவ்வொரு இந்தியரின் கடமை "..

      Delete

    9. சக மனிதன் மீது வெறுப்பை உமிழ்வது நல்லது அல்ல. கோட்ஸே வின் hindu kosamum .thalipankalin islamamum oru pullil onraka irukkum...

      Delete
    10. நன்றி நண்பர் திரு.சுருளி வேல். ...

      நண்பர் ஜெகநாதன் அவர்களே ...
      காந்தி "பிரிட்டிஷாரை சக மனிதனாக " பார்த்ததாலேயே சுதந்திர மூச்சு விட கால தாமதம் ..
      விநாயக் கோட்ஸே யும் பல நாட்களாக காந்தியை "சக மனிதனாக & உத்தமராக " நினைத்தவர் என்பதையும் மறக்க கூடாது நண்பரே ...
      காந்தி பலமுறை "விடுதலை தீ "யை. அஹிம்சை என்னும் தண்ணீர் ஊற்றி அணைத்தவர் ....
      நன்றி
      கோட்ஸே யின் வாதத்தை "ஹிந்து கோசம் மட்டுமே " என உதறி தள்ளிவிட்டு விட முடியாது ...

      Delete
    11. கொலைகாரனுக்கு தூக்கு.அழகுக்கு ஆராதனை

      Delete
  3. கூட்டுவற்கு காந்தி

    (தூய்மை இந்தியா)

    கும்பிடுவதற்கு கோட்ஸே

    பாரத் மாதாகீ ஜே!!!

    ReplyDelete
  4. ஒரு இனத்தின் வஞ்சகத்தால், ஒரு இனம் நசுக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை பொருத்துக்கொள்ள முடியமால் ஏற்பட்டது தான் ஹிட்டலர் யுத்த சரித்திரம் என்பதை யாரும் மறக்க முடியாது,,,,,,, ஆதிதிராவிடர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை எனில் அதை அவசர வழக்காக விசாரிக்க சட்டத்தில் உள்ளது,,,, ஆனால் நமது பிரச்சனை வருட விழாவாக தொடர்கிறது,,,,,இதற்கு காரணம் சட்டமா,,,,,, அல்லது கயவர்கள் போட்ட திட்டமா,,,,, சம்மந்தப்பட்ட அதிகாரிகளே,,,,,,தலைவர்களே,,,,,,,,,,,,,,,,விரைந்து முடிவு கொடு,,,,,,,அல்லது விரைந்து விடைபெறு,,,,,,,,,,,,,என் மக்களுக்கு உங்களால் பாதுகாப்பையும் நல்லதையும் செய்ய முடியும் என்று என் மனம் ஏற்க மறுக்கிறது

    ReplyDelete
    Replies
    1. புரியல சார். எத பத்தி? யார பத்தி? சொல்றீங்க. Just for knowledge.

      Delete
  5. avar sonnathu adw list pathi.

    ReplyDelete
  6. kooturau paniyaalar thervu mudiu eppa varum. yen kalam thaazthugiraargal

    ReplyDelete
  7. adw listavathu vidunga, illana kooturau paniyaalar listna vidunga.ethaume vidamal irunthaal eppadi.

    ReplyDelete
  8. Bye...bye...bye.....##2014##......Welcome...welcome...***2015***

    ReplyDelete
  9. Bye...bye...bye.....##2014##......Welcome...welcome...***2015***

    ReplyDelete
  10. gotche kku kovil kattalaam aanaa rupaa notula poda mudiyumaa?

    ReplyDelete
  11. சுபாஷ்சந்திரபோக்ஷ் அவர்களுக்கு காந்தி செய்த துரோகத்திர்க்கு கிடைத்த பரிசு துப்பாக்கி குண்டுகள்

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு

      பகவத் சிங் & ஆயுதமேந்திய விடுதலை போராட்ட மா வீரர்களுக்கு காந்தி நல்லதா செய்தார் ????
      கடைசி வரை அவர்களின் மரணதண்டனைக்கு "வாய் மூடி அஹிம்சா வழி " என்ற பெயரில் பச்சை கொடி தானே காட்டினார்???

      Delete
  12. புத்தாண்டாக மலரும் ஆண்டு
    புதுமைகளின் ஆண்டாக
    புத்துணர்வின் ஆண்டாக
    உறுதிமிக்க ஆண்டாக
    மனிதத்தின் மகத்துவ ஆண்டாக
    அனைவரின் மகிழ்வாண்டாக
    அனைத்திலும் வெற்றி ஆண்டாக
    அமைந்திட என் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
    என்றும் உங்கள் நண்பன் //////// ARM

    ReplyDelete
  13. arm sir neenga adw. list ethirpaarkkireergala...

    ReplyDelete
  14. காந்தி யின் கொலைக்கு பின்னர்....இவ்வளவு செய்திகளா..???
    நன்றி .இத்தகவலை அளித்ததற்கு...


    ReplyDelete
  15. தேசிய நலனுக்காக பாடுபட்ட காந்தி மகாத்மா....
    அவரை கொன்ற கோட்சே நாட்டிற்கு கடவுள்...

    நல்ல காமெடி!!!!

    கோட்சே தேசியவாதி என்றால் நாட்டின் விடுதலைக்குப் அவரது பங்களிப்பு என்ன?

    கோட்சேவுக்கு கோயில்கட்டும் வேகத்தை ஏன் நேதாஜியின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை அவிழ்த்து விட அரசு முன் வரவில்லை.

    வாஜ்பாய்க்கு பாரதரத்னா கொடுத்த வேகத்தை ஏன் அரசு நேதாஜிக்கு பாரதரத்னா கொடுக்க முன் வரவில்லை.

    கோட்சே சுட்டது காந்தி என்ற வயது முதிர்ந்த இந்தியர்
    ஆனால் பகத்சிங் சுட்டது சாண்டர்ஸ் என்ற ஆங்கில அதிகாரி, பகத்சிங் வரலாற்றை மறைக்க /மறக்க என்ன காரணம்?

    ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான டயர் என்ற அதிகாரியை இங்கிலாந்து வரை விரட்டி சென்று பழிதீர்த்த உத்தம்சிங் என்ற தேச பக்தரை விட கோட்சே அரிய செயல் ஒன்றும் செய்யவில்லையே!!!

    ReplyDelete
    Replies
    1. யானைக்கு மதம் பிடித்தால் காட்டை அழித்து விடும்!!!
      ஆனால் மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட்டையே ..............!!!!!!

      நாட்டை காப்பாற்ற சிந்தியுங்கள்!!!

      Delete
  16. In TN, some people died, tarnished, distrubed public for supporting culprit and injustice and taking revenge character people. Many trs and makal nala employee(they r mahatma). why we talk Goadse

    ReplyDelete
  17. கோட்சேவுக்கு கோயில்? இந்த
    தேசம் எங்கே போகிறது?

    ReplyDelete
  18. காந்தியின் அகிம்சை தான் சிறந்து என்றால் பாகிஸ்தான் ,சீனாவை வீரர்கள் தாக்கும்போது. கன்னத்தை காண்பிக்க வேண்டியது தானே ஏன் நேதாஜி உருவாக்கிய ராணுவ வீரர்களை வைத்து பதில் தாக்குதல் நடத்துகிறார்கள் நேதாஜி பின்னால் நின்று சுதந்திர போரட்டத்தை நடந்திருந்தால் இன்று நாம் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருப்போம்

    ReplyDelete
  19. Subash chandhar bose yen thotru ponar?

    ReplyDelete
    Replies
    1. காந்தி போன்ற எட்டப்பன் பரம்பரையினர் நிறையபேர் இருந்ததால் ஆங்கிலேயனிடம் ஆறுவருடம் நேதாஜி அவர்களை இந்தியாவிற்குள் விடமாட்டோம் என்று சொல்லித்தான் சுதந்திரத்தை பெற்றனர் ஆங்கிலேயன் கடைசிவரை பயந்த்து சிந்தித்தது நேதாஜி பற்றி மட்டுமே

      Delete
  20. காந்தியோ கோட்சேவோ
    நீங்களோ நானோ
    இன்னும் மிருகங்கள் தான்...

    100% குறைபாடில்லாத ஒரு உயர்ரக கணினியை மனிதன் துல்லியமாக அறிவியலால் கண்டுபிடித்ததைப் போல்- 'யாருக்கும் பாதிப்பில்லாத வாழ்வை வாழும் வழியை' வாழ்வதற்கு மனிதன் இன்னும் கண்டுபிடிக்கவேயில்லை.

    Gandhi's 'MY EXPERIMENTS WITH TRUTH' gets failure.

    Godse's term can be exactly potrayed as 'Newly made gun killing the scientist who invented it'

    As Nobel peace prize announced every year with the money earned by Alfred Nobel from the discovery of Dynamo used highly in destruction bombs against human life - everything can't be judged wise.

    Gandhi travelled towards truth and non- violence. That affected Godse. It can't be understand by Gandhi(non-violence).

    Non-violence of Gandhi killed many Indians violently. One of the violence is Godse.

    Eventhough view of Godse is wise due to the higher pain felt due to Gandhi's violence Godse shouldn't be supported anytime.

    Because the future India should follow TRUTH & NON-VIOLENCE though Gandhi killed.

    If we show Knife and a flower, everybody likes flower alone.

    If we ask the person surrounded by thieves, we blindly omit flower and move towards the selection of knife.

    Problem is that bad things occupied human mind more.

    பாவம் காந்தி.
    அகிம்சை விடுத்து இம்சை செய்பவராய் இருந்திருந்தால் - இன்றைய அரசியல்வாதி போல் சுகமாய் வாழ்ந்தி்ருப்பார்.

    இன்றைய மனித எண்ணங்களின்படி-
    காந்தி
    பாரதி
    அண்ணா காமராஜர்
    பிழைக்கத் தெரியாதவர்கள்.

    நேரு
    இன்றைய சினிமா கவிஞர்கள்
    இன்றைய அரசியல்வாதிகள்
    பிழைக்கத்(மட்டுமே) தெரிந்தவர்கள்.

    ஆடையின்றி நாகரிகம் இன்றி
    காட்டில் மிருகமாகவே வாழ்ந்திருக்கலாம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி