தொகுப்பூதிய கணினி பயிற்றுநர் நியமனம் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2014

தொகுப்பூதிய கணினி பயிற்றுநர் நியமனம் ரத்து


நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர்களை தேர்வுசெய்ய சற்று காலம் ஆகும் என்பதால் அதுவரையில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக டிசம்பர் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 652கணினி பயிற்றுநர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் தொகுப்பூதிய நியமனம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா இதை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி