பொதுத்தேர்வு கவுண்டவுன் தொடக்கம்........... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

பொதுத்தேர்வு கவுண்டவுன் தொடக்கம்...........

 எஸ்.எஸ்.எல்.ஸி.,- ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு எத்தனை நாள் இருக்கிறது என்பதை, மாணவர்களுக்கு நினைவூட்டி, தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், பள்ளி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகையில் எழுதி வருகின்றனர். இதை, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச், 5ம் தேதியும், அதை தொடர்ந்து, மார்ச், 19ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வும் துவங்குகிறது. அதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாநில அளவில் சாதனை படைப்பதுடன், அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக யூனிட் தேர்வு, திருப்புத்தேர்வு என பல கட்டமாக மாணவ, மாணவியரை தயார்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தேர்வு துவங்க உள்ள நாட்களை மாணவர்களுக்கு நினைவூட்டி, தங்களை தயார்படுத்தும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தகவல் பலகை மூலம் எழுதப்பட்டு வருகிறது. இது எந்த பள்ளியிலும் இல்லாத வகையில், புதிய முயற்சியாக, கடந்த, 2012ம் ஆண்டு துவங்கியது.தற்போது, மூன்றாம் ஆண்டாகவும், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, மாணவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. தினமும் காலையில் பள்ளிக்கு வரும், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 மாணவர்கள், இந்த தகவல் பலகையை கடந்தே செல்வதால், தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ள நாட்களை எண்ணி, முழுமூச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சியை, பெற்றோர் மற்றும் கல்வியாளர் வரவேற்றுள்ளனர்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி