ஆசிரியர் தேவை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

ஆசிரியர் தேவை

A female, mbc, science teacher is required to vlb janagiyammal aidded school which is in coimbatore.
Eligible candidates are advised to contact this school.
ph :0422 260 5789

11 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. Any one know about pg second list cv complete more then one month

    ReplyDelete
  3. பாராட்டவும், பின்பற்றவும் வேண்டிய முயற்சிகள் !
    ----------------------
    அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் அரசுப் பள்ளிகளை நடத்திக் காட்டிய உதாரணங்களும் உள்ளன.
    நாமக்கல் மாவட்டம் ‪#‎ஊத்துப்புளிக்காடு‬ ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 34 மட்டுமே. ஆனால், தற்போது 172.
    இவ்வூருக்குப் பேருந்து வசதி இல்லாத போதும், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 20 வேன்களில் மாணவர்கள் இந்த அரசுப் பள்ளிக்கு வருகின்றனர்.
    ஈரோடு நகராட்சி துவக்கப் பள்ளியில் 2009-ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 72 மட்டுமே. ஆனால் தற்போது அப்பள்ளியில் 235 மாணவர்கள் உள்ளனர்.
    இப்பள்ளி மாணவர்களுக்கு ‪#‎உடற்பயிற்சி‬, ‪#‎யோகா‬ போன்றவை கற்பிக்கப்படுகிறது. இதனால், ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலிருந்து 75 மாணவர்கள் இப்பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
    2002-ஆம் ஆண்டு ‪#‎கரூர்‬ மாவட்டம் ‪#‎நரிக்கட்டியூர்‬ ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து. இந்த ஓராசிரியர் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் எடுத்த முயற்சியினால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 217.
    தற்போது ஏழு ஆசிரியர்களுடன் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக வளர்ந்துள்ளது. இப்பள்ளியில் அறிவியலுக்கு மட்டுமன்றி எல்லாப் பாடங்களிலும் ஆண்டுதோறும் எல்லா வகுப்புகளுக்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி, பெற்றோரும் இதைக் காண வருகிறார்கள்.
    வகுப்புக்கு ஒரு கணினி வீதம் ஐந்து கணினிகள் உள்ளன. தமிழகத்திலேயே இணைய வசதி உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி இதுவாகத்தான் இருக்க வேண்டும். தொலைபேசி வசதியும் அவ்வாறே. ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியை பாட வேளைகளில் அணைத்து வைத்துவிட்டு, அவசர அழைப்புகளுக்கு இந்தத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள்.
    தினமும் மாலை பள்ளி முடிந்த பின்பு ஒரு மணி நேரம், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

    #‎குமரி‬ மாவட்டம், ‪#‎பூச்சிவிளாகம்‬ ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 2011-ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 24. இப்பள்ளியின் தலைமையாசியரும், மற்ற ஆசிரியர்களும் எடுத்த முயற்சியினால், மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 112-ஆக உயர்ந்துள்ளது.

    ‪#‎கோவை‬ மாவட்டம் ‪#‎ராமம்பாளையம்‬ துவக்கப் பள்ளியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை 27. அது தற்போது 74-ஆக உயர்ந்துள்ளது. இப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்த முயற்சியும், கிராம மக்கள் அளித்த ஒத்துழைப்பும்தான் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.

    #‎புதுக்கோட்டை‬ மாவட்டம் ‪#‎நெடுவாசல்‬ ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை 22. இப்பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சியினால், மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 124-ஆக உயர்ந்துள்ளது.

    ‪#‎வேலூர்‬ மாவட்டம் ‪#‎சொங்காடு‬ ‪#‎மோட்டூர்‬ கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் 2010-ஆம் ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 123. தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சியினால் தற்போது 151.

    ஆசிரியர்கள் முயற்சி செய்தால் அரசுப்பள்ளிகளை பாதுகாப்பதோடு, மாணவர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த முடியும் என்பதற்கான உதாரணங்களே இவை.

    ReplyDelete
  4. தமிழகத்தில் சமீப காலத்தில் சுமார் 1,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. சென்னை மாநகரில் மொத்தமிருந்த 303 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் 1,20,000-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000-ஆக குறைந்துவிட்டது.

    அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால், ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்? இந்த ஆபத்தை உணர்ந்த மாநில அரசு, ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதியது. அதனால், பல பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    ஆனால், 2013-14, 2014-15 ஆகிய ஆண்டுகளில் அரசின் அறிக்கையின்படியே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த அவலம், யாருக்காவது இதன் விளைவு புரிகிறதா????

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்களின் தேவை படிப்படியாக குறைந்து கொண்டுவருகிறது, ஏனெனில் மாணவர்களின் வருகை குறைந்து விட்டதும், சில பள்ளிகளை மூடவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது என்பதையும், கடந்தகல ஆசிரியர் பணி நியமனத்திலே புரிந்து கொண்டோம். காரணம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை தொடக்கப் பள்ளிகள் கொடுக்க தவறி விட்டன என்பது நிருபணமாகிவிட்டது.

      பெற்றோர்களின் எதிர்பார்ப்பை என்னவென்று அறிந்து பூர்த்தி செய்யாமல், இதே நிலை நீடித்தால் இதன் எதிர்மறையான விளைவை உயர்நிலை பள்ளிகளும் அதன் ஆசிரியர்களும் எதிர்கொள்ள வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

      இந்த நிலை வராமல் தடுக்க பணியில் இருக்கும் ஆசிரியர்கள் / சங்கங்கள் என்ன செய்ய போகின்றன?????. எப்பொழுதும் போல அரசை குறை சொல்ல போகின்றோமா!! அல்லது தனியார் பள்ளிகளின் போட்டிகளுக்கு பதிலடி கொடுத்து, பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்று, திறமையாக போதித்து அறிவு சார்ந்த மாணவர்களை உருவாக்கப் போகிறோமா!!!!

      Delete
  5. அன்பர்களே அந்தி மாலை வணக்கம்

    ReplyDelete
  6. மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநில அரசின் 10 ஆண்டு கனவுத் திட்டத்திற்கான (2013-2023) மொத்த ஒதுக்கீடு ரூபாய் 15 லட்சம் கோடி. இதில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் சேர்த்து உத்தேச ஒதுக்கீடு ரூபாய் 59,000 கோடி. இது 10 ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு. அதுவும் அரசு, தனியார் கூட்டு ஒதுக்கீடு. இது போதுமானதல்ல.

    அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட,

    தாய்மொழி பயிற்று மொழியாக தொடர வேண்டும்
    ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்
    அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும்

    மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்

    பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும்

    கல்வித் தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்

    மத்திய அரசின் கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும்

    இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்பந்தித்துப் பெற வேண்டும்.

    ஆம், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும்.

    பாட மொழியில் அல்ல.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி