நம்பிக்கை தந்த வாழ்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2014

நம்பிக்கை தந்த வாழ்க்கை

சுனாமியில் தனது மூன்று குழந்தைகளை பறிகொடுத்தவர், சுனாமியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நம்பிக்கை இல்லத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

நாகப்பட்டினம், புதிய கடற்கரைச் சாலையில் வசித்து வருபவர் கே. பரமேஸ்வரன். (ஓஎன்ஜிசி) உதவி செயற்பொறியாளரான இவர், சுனாமியின் போது தனது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்து விட்டார். ரக்ஷ்ன்யா (12), காருண்யா (9), கிருபாசன் (5) ஆகியோரை பறிகொடுத்து விட்டார். இவரது மனைவி சூடாமணி எல்ஐசியில் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

சுனாமியில் அவருக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அவர் தெரிவித்தது:

எனது பிறந்த நாளுக்காக நான் எனது குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் நாகை கடற்கரைக்கு சென்றிருந்தோம். அப்போது திடீரென கடலிலிருந்து வந்த அலை எங்களை எல்லாம் தூக்கிச் சென்றது. தட்டுத் தடுமாறி ஒரு மரத்தை பிடித்து நான் தப்பினேன். எனது குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டார்கள்.

பிள்ளைகளின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் எனது மனைவி. அவரால் துக்கத்தை தாங்க முடியவில்லை. சுனாமி வந்து 4 நாள்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட எந்த குழந்தையையாவது எடுத்து வளர்ப்போம் என முடிவு செய்தோம். ஏனெனில், எங்கள் பிள்ளைகளின் உடலை தேடி அலையும்போது, பல சிறுவர்கள் தங்கள் பெற்றோரைத் தேடி அலைந்ததைக் கண்டோம். அதனால் அவர்களில் யாரையாவது எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

முதலில் 4 குழந்தைகள் வந்தார்கள். சக்திவேல், சரண், பாலகுமார், சங்கீதா என நான்கு பேரை வளர்த்தோம். அதன்பிறகு, சில மாதங்கள் கழித்து இதனை, நம்பிக்கை இல்லமாக மாற்றினோம். தற்போது 37 குழந்தைகள் உள்ளனர்.

சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த சரண் பொறியியல் படிப்பு படித்து விட்டு வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல், நாகூர் சம்பாத் தோட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் மரைன் பட்டயப்படிப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ளார். தற்போது சங்கீதா பட்டயப்படிப்பு 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார் என்றார் பரமேஸ்வரன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி