சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டுமுறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.
இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.

மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்குமதிப்பெண்ணாக வழங்கப்படும்.2014-15-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பிலும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை பின்பற்றப்படுவதால், 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையே தொடரவேண்டும் என ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையைத் தொடர பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பில் வரும் கல்வியாண்டில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.மாநில அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் உள்ள மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறை இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி முறையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது கூட சமச்சீர் கல்வி முறை படிப்படியாக சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அது சரியான முறை தான் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தற்போது அரசால் கொண்டுவரப்பட்ட சி.சி.இ முறை 9 ஆம் வகுப்பு வரை கொண்டுவரப்பட்டு 10 ஆம் வகுப்பிற்கு கொண்டுவரப்படாததால், இந்த தரமான மதிப்பீட்டு முறை குறித்த விழிப்புணர்வுபொது மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.

மேலும் 9 ஆம் வகுப்பு வரை சி.சி.இ மதிப்பீட்டு முறையில் பயின்ற மாணவர்கள் ஹார்மோன் மாற்றங்களால் குழம்பிய மனநிலையில் இருக்கக்கூடிய வாழ்வின் முக்கியப்பருவத்தில், தற்போது உள்ள பொதுத்தேர்வு முறையில் படிக்க மிகவும் சிரமப்படுவார்கள். எனவே அரசு உடனடியாக சி.சி.இ மதிப்பீட்டு முறையை 10ஆம் வகுப்பிற்கு அமல்படுத்தினால் மட்டுமே தற்போதைய அரசால் கொண்டுவரப்பட்ட இம்முறை முழுமையடையும் - இவ்வாறு கூறுகிறார்கள்.

6 comments:

  1. 40 marks at the hand of Teachers' conscious plays a major role. The lethargic attitude of Teacher would spoil the growth of Indian society as well as students' individual life.

    ReplyDelete
  2. 10-ஆம் வகுப்பில் வரும் கல்வியாண்டில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அமல்படுத்துவதே சிறந்தது.9ஆம் வகுப்புவரைசி.சி.இ மதிப்பீட்டு முறையில் பயின்ற மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் படிப்பதற்க்கு மிகவும் சிரமப்படுக்றார்கள்.அரசு உடனடியாக சி.சி.இ மதிப்பீட்டு முறையை 10ஆம் வகுப்பிற்கு அமல்படுத்தினால் மட்டுமே தற்போதைய அரசால் கொண்டுவரப்பட்ட இம்முறை முழுமையடையும்.மேலும் மாணவர்களுக்கும் எளிமையாக இருக்கும்.பொதுத்தேர்வு பயம் முழுமையாக நீக்கப்படும்

    ReplyDelete
  3. சி சி இ முறை சுத்த வேஸ்ட்!!!!!
    பழைய முறையே பெஸ்ட்!!!!!
    சி சி இ முறை சுத்த வேஸ்ட்!!!!!
    பழைய முறையே பெஸ்ட்!!!!!
    சி சி இ முறை சுத்த வேஸ்ட்!!!!!
    பழைய முறையே பெஸ்ட்!!!!!
    சி சி இ முறை சுத்த வேஸ்ட்!!!!!
    பழைய முறையே பெஸ்ட்!!!!!

    ReplyDelete
  4. NO PROBLEM
    FOR
    TNTET 2013
    SELECTED CANDIDATES !!

    ReplyDelete
  5. IF CCE INTRODUCED IN 10 STD,

    ALREADY DAMAGED QUALITY

    WOULD BE

    DOUBLE DAMAGED !!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி